நாடாளுமன்ற தேர்தலில் காங்.க்கு 8 இடங்கள்தான் கிடைக்கும்

புதன்கிழமை, 17 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், ஜூலை. 18 - அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரசுக்கு 7 அல்லது 8 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என சட்டசபையில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆவேசமாக பேசினார்.

கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முந்தைய பா.ஜ.க ஆட்சி குறித்து சபாநாயகர் கே.ஆர். ரமேஷ் குமார் சில கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து முன்னாள் முதல்வரும், கர்நாடக ஜனதா கட்சி தலைவருமான எடியூரப்பா பேசியதாவது, 

நாங்கள் தவறு செய்து விட்டோம். எங்களது தவறு காரணமாக வேறு வழியின்றி காங்கிரஸ் தலைமையிலான அரசை மக்கள் தேர்ந்தெடுத்து விட்டனர். எங்களுக்கு நல்ல பாடம் கிடைத்து விட்டது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு கர்நாடகத்தில் 7 அல்லது 8 இடங்கள் தான் கிடைக்கும். அதற்கான திட்டம் விரைவில் வகுக்கப்படும். இவ்வாறு எடியூரப்பா பேசினார். 

இதன் பின்னர் அவரும், அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர். எடியூரப்பாவுக்கு ஆதரவான பா.ஜ.க.வும் வெளிநடப்பு செய்தது. எடியூரப்பாவை மீண்டும் கட்சியில் சேர்க்க மாநில பா.ஜ. தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். எடியூரப்பா தரப்பில் இருந்து இன்னும் உறுதியான பதில் கிடைக்கவில்லை. 

இந்நிலையில் எடியூரப்பாவில் சட்டசபை பேச்சு பா.ஜ. தலைவர்களுக்கு உற்சாகத்தை அளித்திருப்பதாக பெங்களூர் வட்டாரங்கள் தெரிவித்தன. 

17தஅங21அ

சர்வதேச நிதியத்தின் முன்னாள் தலைவர் வங்கி வேலைக்கு சேர்ந்தார்

மாஸ்கோ, ஜூலை. 18 - நியூயார்க் ஓட்டலில், பணிப்பெண்ணைக் கற்பழித்ததாக வழக்கில் சிக்கி மீண்ட முன்னாள் சர்வதேச நிதியத்தின் தலைவர் டோமினிக் ஸ்டிராஸ் கான், ரஷ்யாவின் ரோஸ்நெப்ட் வங்கியில் பணியில் சேர்ந்துள்ளார். அந்த வங்கியின் 11 பேர் கொண்ட போர்டு உறுப்பினர்களில் ஒருவராக கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2011 ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க்கில் தங்கியிருந்த போது ஓட்டல் பணிப்பெண்ணை கற்பழித்து விட்டதாக சர்ச்சையில் சிக்கினார் கான். பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டு கைவிடப்பட்டது. பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார் கான். ஆனால் இந்தக் கற்பழிப்பு வழக்கு அவரது பெயரைக் கெடுத்து விட்டது. இந்த நிலையில் தற்போது ரஷ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான ரோஸ்நெப்ட் வங்கியின் போர்ட் உறுப்பினர்களில் ஒருவராக கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: