முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் தாவல்: நிதிஷ்குமார் மீது குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 22 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, ஜூலை 23 - பீகாரில் நடந்து வந்த ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் கடந்த மாதம் விரிசல் ஏற்ப்பட்டது.  குஜராத் முதல் மந்திரி நரேந்திரமோடிக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியில் இருந்து விலகுவதாக ஐக்கிய ஜனதா தளம் தலைவரும்,பீகார் முதல்மந்திரியுமான நிதிஷ்குமார் அறிவித்தார். 243 எம்.எல்,ஏக்களை கொண்ட சட்டசபையில் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு 117 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பா.ஜ.க வசம் 91 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். லல்லுபிரசாத் கட்சிக்கு 22 எம்.எல்.ஏக்களும், காங்கிரசுக்கு 4 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். 

 கூட்டணியில் விரிசல் ஏற்பட்ட பிறகு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் 126 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். 4 சுயேச்சைகளும், காங்கிரசும் கைகொடுத்ததால் நிதிஷ்குமார் ஆட்சி தப்பியது. இந்த நிலையில் சட்டசபையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்குள்ள 117 பலத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் பா.ஜ.க எம்.எல்.ஏக்களுக்கு வலைவீசுவதாக தெரியவந்துள்ளது. அந்த வகையில் சிக்கிய பா.ஜ.க. எம்.எல்.ஏ அமர்நாத்காமி, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவர் நேற்று முன்தினம் பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்டார். 

 இதற்கிடையே பா.ஜ.க எம்.எல்.ஏக்களில் மேலும் பலர் தங்கள் பக்கம் வர தயாராக இருப்பதாக ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் கூறிவருகிறார்கள். விரைவில் முதல்கட்டமாக 7 பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் ஐக்கிய ஜனதா தளத்துக்கு தாவுவார்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். இதனால் பீகார் மாநில பா.ஜ.க.வில் சலசலப்பு ஏற்ப்பட்டுள்ளது. இந்த சலசலப்பை நிதிஷ்குமார் திட்டமிட்டு உருவாக்கி இருப்பதாகவும், பா.ஜ.க வை உடைக்க அவர் திட்டமிட்டு செயல்படுவதாவும் பா.ஜ.க  மேலிடத்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்