எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, ஜூலை. 26 - ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுகிறது. அதே தினத்தில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
ஜனாதிபதி மாளிகையில் புதிதாக கட்டப்பட்ட பிரணாப் முகர்ஜி பொது நூலகம் என்ற பெயரிலான நூலகத்தை அவர் திறந்து வைக்கவுள்ளார். இந்த நூலகம் ஜனாதிபதி மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்காக தொடங்கப்பட்டுள்ளது. இது பற்றி ஜனாதிபதி மாளிகை செய்தி தொடர்பாளர் வேணு ராஜாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த நூலகம் முழுவதுமாக குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு தகவல்கள் அடங்கிய புத்தகங்கள், செய்தித் தாள்கள், கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது. மாற்றுத்திறனாளி குழந்தைகள் உட்பட அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையிலான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. அரசு வேலைவாய்ப்பு தேர்வுகள் உட்பட மற்ற தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு தனி அறைகளும் இடம்பெற்றுள்ளன.
ஜனாதிபதி மாளிகையில் புதிதாக வீடியோ கான்பரன்சிங்கை தொடங்கி வைத்து மாநில கவர்னர்களுடன் ஜனாதிபதி பிரணாப் உரையாடுகிறார். அமைச்சர்கள் பங்கேற்கும் விருந்திலும் அவர் கலந்து கொள்கிறார். ஜனாதிபதி கடந்த ஓராண்டில் பங்கேற்ற முக்கிய நிகழ்ச்சிகள், டிஜிட்டல் புகைப்படங்கள் அடங்கிய தனி வெப்சைட் அலுவலக இணையதளத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. இதனையும் பிரணாப் தொடங்கி வைக்கவுள்ளார். டிஜிட்டல் புகைப்பட நூலகத்தில் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் முதல் நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் பொறுப்பேற்ற ஜனாதிபதிகளின் புகைப்படங்கள் இடம்பெறும் என்றும் ராஜாமணி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


