முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிற மொழி பாடங்களில் சந்தியா மாநிலத்தில் முதலிடம்

திங்கட்கிழமை, 9 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.10 - பிளஸ் 2 தேர்வில் தமிழ் அல்லாத பிற மொழியை தாய்மொழியாக எடுத்து படித்தவர்களில் சென்னை குரோம்பேட்டை மாணவி கே.சந்தியா 1200க்கு 1191 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் தமிழ் அல்லாத பிற மொழிகளான சமஸ்கிருதம், பிரெஞ்ச் ஆகிய பாடங்களை தாய்மொழியாக எடுத்து படித்த மாணவர்களில் குரோம்பேட்டை மாணவி கே.சந்தியா 1200க்கு 1191 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் குரோம்பேட்டையிலுள்ள எஸ்.ஆர்.டி.எப். விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். இவர் சமஸ்கிருதத்தை மொழிப்பாடமாக எடுத்து படித்தவர்.

1200க்கு 1190 மதிப்பெண்கள் எடுத்த கே.ரேகா, வி.ஆர்.ஜெயப்ரதா ஆகியோர் 2வது இடத்தை பகிர்ந்து கொள்கின்றனர். இவர்களில் கே.ரேகா ஓசூரில் உள்ள ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியிலும், வி.ஆர்.ஜெயப்ரதா சென்னை தி.நகரில் உள்ள வித்யோதயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியிலும் படித்தவர்கள். இவர்களில் ரேகா தமிழை மொழிப்பாடமாகவும், ஜெயப்ரதா ப்ரெஞ்சை மொழிப்பாடமாகவும் எடுத்து படித்தவர்கள்.

சென்னையை அடுத்து கீழ்க்கட்டளையிலுள்ள எச்.எப்.சி. மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவியான எஸ்.மகாலட்சுமி 1200க்கு 1189 மதிப்பெண்கள் எடுத்து 3வது ரேங்கை பிடிக்கிறார். இவர் பிரெஞ்சை மொழிப்பாடமாக எடுத்து படித்தவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்