மும்பை தாக்குதல் சம்பவம் - ஜி.பி.எஸ். பெட்டி பாக்.ல் கண்டுபிடிப்பு

புதன்கிழமை, 11 மே 2011      இந்தியா
GPS

புது டெல்லி,மே.12 - மும்பை தாக்குதல் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஜி.பி.எஸ். கருவிக்கான பெட்டி பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008 நவம்பரில் குபேர் என்ற விசைப்படகில் கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவிய தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்களை நடத்தினர். கடலில் வழிகாட்டுவதற்கா அவர்கள் பயன்படுத்திய ஜி.பி.எஸ். கருவியை இந்திய புலனாய்வு அதிகாரிகள் அப்போது கைப்பற்றினர். இப்போது அந்த ஜி.பி.எஸ். கருவி வைக்கப்பட்டிருந்த பெட்டியை கராச்சியில் உள்ள ஒரு வீட்டில் பாகிஸ்தான் அதிகாரிகள் கண்டுபிடித்து கைப்பற்றியுள்ளனர். ஜி.பி.எஸ். கருவியின் ரகசிய எண் மாதிரி வடிவம், தயாரிக்கப்பட்ட தேதி ஆகிய அனைத்து தகவல்களும் பெட்டியில் இடம்பெற்றிருப்பதாகவும் குபேர் விசைப்படகில் கைப்பற்றப்பட்ட ஜி.பி.எஸ். கருவியுடன் அந்த தகவல் ஒத்திருப்பதாகவும் தெரிகிறது. இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பாகிஸ்தானிடம் அளிக்க இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்: