எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தூர், மே. 17 - இந்தியன் பிரீமியர் லீக் 20 - க்கு 20 போட்டியில் இந்தூரில் நடந்த ஆட்டத்தில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ் தான் ராயல்ஸ் அணியை தோற்கடித்தது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 97 ரன்னில் சுரு ண்டது. மெனேரியா அதிகபட்சமாக 31 ரன் எடுத்தார். பிரட் ஹாட்கே 4 விக்கெட் வீழ்த்தினார். ஸ்ரீசாந்த், பரமேஸ்வரன் தலா 2 விக்கெட் எடு த்தனர்.
பின்னர் ஆடிய கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி 7.3 ஓவரில் 2 விக்கெ ட் இழப்புக்கு 98 ரன் எடுத்தது. ஹாட்கே 17 பந்தில் 33 ரன்னும் (5 பவு ண்டரி, 2 சிக்சர்), மெக்குல்லம் 12 பந்தில் 29 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்), எடுத்தனர். ஹாட்கே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தப் போட்டியில் ஆடிய ராஜஸ்தான் அணி 7 -வது தோல்வியைத் தழுவியது. இதனால் அந்த அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. இது வார்னே தலைமையிலான அந்த அணிக்கு பெரிய ஏமாற்ற த்தை அளித்துள்ளது.
கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்கு இது 6 -வது வெற்றியாகும். இந்த ஆட்டத்தில் அடைந்த வெற்றியின் மூலம் அந்த அணி இன்னும் மயிரி ழை வாய்ப்பில் உள்ளது. அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுமா என்பது மதில் மேல் பூனையாக உள்ளது.
இந்தத் தோல்வி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் வார்னே கூறி யதாவது - மோசமான பேட்டிங்கால் இந்தப் போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்தோம்.
100 முதல் 120 ரன்கள் வரை குறைவாக எடுத்தோம். தொடர்ந்து 4 ஆட்டத்தில் தோற்று இருக்கிறோம். ஏராளமான தவறுகளை செய்ததால் தொடர்ந்து தோல்வியை சந்தித்து இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வெற்றி குறித்து கொச்சி அணி கேப்டன் ஜெயவர்த்தனே கூறிய தாவது - இந்தப் போட்டியில் எங்களது வீரர்கள் சிறப்பாக ஆடினார்க ள். எனவே நாங்கள் இதில் எளிதான வெற்றியைப் பெற்றோம். இத னால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
ராஜஸ்தான் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை யும், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனும் மோத இருக்கின்றன.
முன்னதாக தர்மசாலாவில் நடந்த லீக் ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 29 ரன் வித்தியாசத்தில் டெல்லிடேர்டெவில்ஸ் அணியை தோற்கடித்தது நினைவு கூறத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


