சிரியாவில் விமானப்படை தாக்குதல்: 29 பேர் சாவு

Image Unavailable

 

பெய்ரூட், நவ.25 - சிரியாவில் உள்ள விமானப்படை இரு இடங்களில் நடத்திய தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர். பிரிட்டனை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ராமி அப்துர் ரஹ்மான்  கூறுகையில் சிரியா விமானப் படையைச் சேர்ந்த விமானங்கள் அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தின. 

அப்போது குண்டுகள் தவறுதலாக அங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் விழுந்தன. இதில் பொதுமக்கள் 14 பேர் இறந்தனர். இதேபோல் அலெப்போ நகரை அடுத்துள்ள அல்_ பாப் நகரில் சிரியா போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர் என்றார். 

        

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ