விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவுடன் செயல்பட சீனா முடிவு

Image Unavailable

 

பீகிங், டிச.3 - விண்வெளி தொடர்பான ஆராய்ச்சியில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. சந்திரனில் தரை இறங்கி ஆராய்ச்சி செய்வதற்காக சீனா தயாரித்துள்ள முதல் ஆளில்லா விண்கலமான சாங்_இ_   3 லாங் மார்ச் 3பி ராக்கெட்டின் மூலம் ஷிசாங் விம்வெளி ஏவு தள மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் பூமியிலிருந்து விலகி செவ்வாய்க்கிரகத்தை நோக்கி தனது 300 நாள் பயணத்தை தொடங்கியதற்கு மறுநாள் சீனாவின் இந்த விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது.

சாங்_இ_3 விண்கலம் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சான வி%ண்வெளி விஞ்ஞானிகள் விண்வெளி தொடர்பான விவகாரங்களில் மற்ற நாடுகளுடன் குறிப்பாக அண்டை நாடான இந்தியாவுடன் இணைந்துசெ யல்படத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. சந்திர விண்கல திட்டத்தின் தலைமை துணை கமாம்டர் லீ பென்ஜாங் கூறுகையில்  சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி எந்தப் போட்டி நோக்கத் தோ டும் செய்யப்படவில்லை. சந்திர வின்கலத் திட்டம் தொடர்பாக பிற நாடுகளின் ஒத்துழைப்பை வரவேற்கிறோம். மனித மேம்பாட்டுக்காக விண்வெளி தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளார். 

சாங்_இ_ விண்கலம், பூமி_சந்திரனின் சுற்றுப்பாதையில் திட்டமிட்டபடி நுழைந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விண்கலம் டிசம்பர் மாத மத்தியில் சந்திரனில் தரை இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

                              

 

 

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ