முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினி உடல்நலம் பெற முதல்வர் ஜெயலலிதா பிரார்த்தனை

சனிக்கிழமை, 21 மே 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, மே.21 - லதா ரஜினியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா, ரஜினி உடல்நலம் பெற பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது என்ற செய்தியை அடுத்து, பிரபல திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் 13.5.11 அன்றே முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தார். அதற்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா பதில் கடிதம் அனுப்பியதோடு, அப்பொழுதே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்த் பூரண நலம் அடைய வேண்டும் என்ற தனது விருப்பத்தினையும் அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார்கள்.

தற்போது, ரஜினிகாந்த் உடல் நலக்குறைவினால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, முதல்வர் நேற்று ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். லதா ரஜினிகாந்த், ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்தும், அவருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார். அனைத்தையும் கேட்டறிந்த முதல்வர் ஜெயலலிதா, ரஜினிகாந்த் விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்பதாக லதா ரஜினிகாந்திடம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago