முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது ஒரு நாள்: நியூசிலாந்திற்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

ஹாமில்டன், ஜன. 22 - இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2_வது ஒரு நாள் போட்டி ஹாமில்டன் நகரில் இன்று நடக்க இருக்கிறது. 

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நேப்பியரில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

எனவே இன்றைய போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆடி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் மெக்குல்லம் தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 5  போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. இதில் நியூசி. 1_ 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

ஒரு நாள் போட்டியைப் பொறுத்ததவரை இந்திய அணி பலமிக்க அணியாகும். பேட்டிங் மற்றும் பௌலிங்கில் சமபலம் வாய்ந்தது. 

இருந்த போதிலும் வேகப் பந்து வீச்சிற்கு ஏற்ற வெளிநாட்டு ஆடுகளங்களில் இந்தி ய வீரர்கள் ரன் எடுக்க திணறுகின்றனர். 

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை ஷிகார் தவான், ரோகித் சர்மா, கேப்டன் தோனி, விராட் கோக்லி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகிய சிறந்த வீரர்கள் உள்ளனர். 

ஆனால் முதல் போட்டியில் விராட் கோக்லி சதம் அடித்தார். தவிர கேப்டன் தோனி மற்றும் ஷிகார்தவான் ஆகிய இருவர் மட்டும் தாக்குப் பிடித்து ஆடினர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர். 

இந்திய அணி முன்னாதாக தென் ஆப்பிரிக்க பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை இழந்து வெறும் கையுடன் நாடு திரும்பியது.  

எனவே நியூசிலாந்து தொடரில் சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணியின் தோல்விப் படலம் தொடர்கிறது. 

பௌலிங்கைப் பொறுத்தவரை மொகமது சமி நன்றாக பந்து வீசி வருகிறார். அவருக்கு ஆதரவாக புவனேஸ்வர் குமார் உள்ளார். கடந்த ஆட்டத்தில் மூத்த வீரரான இஷாந்த் சர்மா ரன்களை அள்ளிக் கொடுத்து விட்டார். 

எனவே இந்திய வீரர்கள் பந்து வீச்சில் கவனம் செலுத்துவது அவசியம். சிக்கனமாக பந்து வீசினால் தான் வெற்றி பெற முடியும். 

சுழற் பந்து வீச்சைப் பொறுத்தவரை அஸ்வின் மற்றும் ஜடேஜா எதிர்பார்த்த அளவிற்கு பந்து வீசவில்லை. எனவே அமித் மிஸ்ராவிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

மேலும் சுழற் பந்துவீரர்களுக்கு பதிலாக கூடுதலாக ஒரு வேகப் பந்துவீச்சாளருடன் களம் இறங்குவதில் தவறில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. 

எனவே வருண் ஆரோன், ஈஷ்வர் பாண்டே ஆகியோரை பயன்படுத்திக் கொள்வது குறித்தும் இந்திய அணி நிர்வாகம் கேப்டன் தோனியுடன் ஆலோசனை செய்து வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்