மீனவர்கள் 38 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு

Image Unavailable

 

காங்கேசந்துரை, ஜன.31 - தமிழக மீனவர்கள் 38 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று சிறைபிடிக்கப்பட்டனர்.  இலங்கை - தமிழக மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை முடிந்து 3 நாட்களே ஆகியுள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றத்திற்காகவும், இரு நாடுகளும் தடை செய்துள்ள இரட்டை மடிப்பு வலைகளை தமிழக மீனவர்கள் பயன்படுத்தியதற்காகவும் அவர்களை கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் கோசல வர்ணகுலசூர்யா தெரிவித்துள்ளார். 

கைது செய்யப்பட்ட 38 மீனவர்களும் காங்கேசந்துரை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ