பிரச்சினைகளை தீர்க்க பேச்சு: பாகிஸ்தான் கருத்து

Image Unavailable

 

இஸ்லாமாபாத், பிப்.1 - இந்தியா – பாகிஸ்தான் இடையே காஷ்மீர் உள்ளிட்ட இருதரப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண பலன் தரக்கூடிய பேச்சுவார்த்தை அவசியம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லாம் நிருபர்களிடம் கூறுகையில், “இந்தியா – பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண பேச்சுவார்த்தை அவசியம் என்றும் இந்தப் பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாகவும், பலன் தரக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றும் நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம்.

அவர் மேலும் கூறுகையில், “காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் நெருங்கி வருவதற்கு ஏதேனும் தீர்வு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” என்றார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையில் தற்போதுள்ள எல்லைக் கோடுகள் பொருத்தமற்றவையாக கருதப்படும் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். காஷ்மீர் பிரச்சினைக்கு இதுவே தீர்வு தரும் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூயிருப்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

“இப்பிரச்சினையை அணுக வெவ்வேறு வழிகள் உள்ளன” என்றார் தஸ்னிம் அஸ்லாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ