எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உக்ரைன், பிப். 2 - உக்ரைனில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்துக்கு உஸ்பெகிஸ்தானில் இருந்து ஆதரவு தெரிவித்தவர்களுக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் அதிபர் விக்டர் யானுகோவிச்சுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட்டில் நேற்று சிலர் பொது இடத்தில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார் அவர்களை கைது செய்தனர். உஸ்பெகிஸ்தானின் பிரபல புகைப்பட கலைஞர் உமிதா அக்மிதோவா அவரது மகன் டிமூர் கார்போவ், மேலும் இருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இவர்கள் அனைவருமே உக்ரைனை பூர்வீகமாகக் கொண்டவர்கள். உக்ரைன் நாட்டு தேசிய கொடி, அரசை எதிர்த்து வரும் புரட்சியாளர்களின் கொடியை எந்தியபடி இவர்கள் ஊர்வலமாக சென்று பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப் பட்டது.
இதேபோன்ற போராட் டத்தில் ஈடுபட்ட உக்ரைனை சேர்ந்த மேலும் 3 பேருக்கு 15 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஐரோப்பிய யூனியன் உடனான ஒப்பந்தங்களை உக்ரைன் அதிபர் விக்டர் யனுகோவிச் நிராகரித்ததால் அவருக்கு எதிராக அங்கு கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பலர் உயிரிழந்து விட்டனர். முக்கிய அலுவலகங்களை எதிர்ப்பாளர்கள் ஆக்கிரமித்துள் ளதால் நிலைமை மோசமடைந்து வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


