முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவில் எரிமலை சீற்றம்: 14 பேர் சாவு

ஞாயிற்றுக்கிழமை, 2 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

கரோ, பிப். 3  - இந்தோனேசியாவின் சினாங்க் எரிமலை கடந்த சனிக்கிழமை குமுறியதில் பள்ளிச் சிறுவர்கள் 4 பேர் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். 

எரிமலை வெடிப்பு ஏற்பட்ட பகுதியிலிருந்து 2.7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுகமெரியா கிராமத்தின் சாலையோரத்தில் சாம்பல்களால் மூடப்பட்ட உடல்கள் கிடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

14 பேரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டன. சிறுவர்கள் 4 பேரும் எரிமலையை வேடிக்கை பார்க்கச் சென்ற போது அதில் சிக்கிக் கொண்டது தெரிய வந்துள்ளது. 

விபத்தில் சிக்கிய 3 பேர் படுகாயம்அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அவசர சிகிட்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளனர். 

இந்த எரிமைலைச் சீற்றத்தில் மேலும் பலர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது. எரிமலைக்கு அருகில் உள்ள பாதைகளில் அதிக அளவு வெப்பம் கொண்ட சாம்பல்கள் பரவிக் கிடப்பதால் மீட்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளது என்று தேசிய பேரிடர் மீட்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நக்ரோஹோ தெரிவித்தார். இது இந்தோனேசியாவில் சமீபத்தில் நிகழ்ந்த எரிமலைச் சீற்றங்களில் மிகவும் பயங்கரமானது என்றுஅரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago