ரஜினிக்கு சிகிச்சை அளிக்க அமெரிக்க டாக்டர்கள் வருகை

RAJINIKANTH

சென்னை, மே​ - 25 - நடிகர் ரஜினிகாந்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து டாக்டர்கள் வந்துள்ளனர். அவர்கள் 3 நாள் சென்னையில் தங்கி சிகிச்சை அளித்து செல்வார்கள் என்று கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவால் கடந்த 13 ம் தேதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி வார்டுக்கு ரஜினி மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு நுரையீரலில் நீர்க்கோப்பு இருந்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. சிறுநீரக பாதிப்பும் இருந்ததால் டயாலிசிஸ் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருந்தபோதிலும் பார்வையாளர்கள் ரஜினியை சந்திக்க தடை விதிக்கப்பட்டது. ரஜினி டி.வி.நிகழ்ச்சிகளை பார்ப்பதாகவும், இட்லி சாப்பிடுவதாகவும் மருத்துவர்கள் கூறினர். ரஜினியின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் அமெரிக்க டாக்டர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவற்றை ஆய்வு செய்த டாக்டர்கள் சில மருத்துவ ஆலோசனைகளை தெரிவித்தனர். அதன்படி மருந்துகள் வழங்கப்படுகின்றன. ரஜினியின் உடல்நிலையை நேரில் ஆய்வு செய்ய அமெரிக்க மருத்துவர்கள் சென்னை வந்துள்ளனர். அவர்கள் ரஜினிக்கு புதிய நவீன முறை சிகிச்சையை அளிக்க உள்ளனர். 3 நாட்கள் சென்னையிலேயே தங்கி சிகிச்சை அளிக்க உள்ளனர். ரஜினியின் உடல்நிலை குறித்து அவ்வப்போது தவறான வதந்திகள் பரவி வருகின்றன. எனவே அவர் ஆஸ்பத்திரியில் பேசுவது போன்ற வீடியோ படத்தை அவரது குடும்பத்தினர் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ