ஜப்பானில் பனிப்பொழிவு: 7 பேர் பலி - 1,000 பேர் காயம்

Image Unavailable

 

டோக்கியோ,பிப்11 - ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சனிக்கிழமை 27 செ.மீ. பனிப்பொழிவு பதிவாகி உள்ளது. மூடுபனி காரணமாக 7 பேர் பலியாயினர், சுமார் 1,000 பேர் காயமடைந்தனர்.

1.3 கோடி மக்கள்தொகை கொண்ட டோக்கியோவில் ஆளுநர் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பனிப்புயல் கடுமையாக தாக்கி வருகிறது. இதனால் வாக்குப்பதிவு பாதிக்கப்படும் என தேர்தல் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.

செண்டை நகரில் கடந்த 78 ஆண்டுகளில் இல்லாத வகையில் 35செ.மீ. பனிப்பொழிவு பதிவாகி உள்ளது. சாலைகளில் பனி உறைந்து கிடப்பதால் கார் உள்ளிட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் 7 பேர் இறந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட் டுள்ளன. இதுதவிர நாடு முழுவதும் பனி தொடர்பான விபத்துகளில் சிக்கி 1,051 பேர் காயமடைந்ததாக ஜப்பான் அரசு வானொலி என்எச்கே தெரிவித்துள்ளது.

பனி காரணமாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை 740 விமானங்களும் ஞாயிற்றுக்கிழமை சுமார் 300 உள்ளூர் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் நரிடா விமான நிலையத்தில் சுமார் 5,000 பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ