கிரிக்கெட் வீரர் கங்குலிக்கு நிலம் ஒதுக்கீடு ரத்து

வெள்ளிக்கிழமை, 27 மே 2011      இந்தியா
ganguly

புதுடெல்லி,மே.27 - பிரபல கிரிக்கெட் வீரர் சவ்ரவ் கங்குலிக்கு கொல்கத்தாவில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை சுப்ரீம்கோர்ட்டு ரத்து செய்துவிட்டது. இந்திய கிரிக்கெட் அணிக்கு பல ஆண்டுகளாக கேப்டனாக இருந்த கங்குலி மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு கடந்த 2000-ம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் சிட்டியில் அப்போது இருந்த இடதுசாரி கூட்டணி அரசு நில ஒதுக்கீடு செய்தது. இதை எதிர்த்து கொல்கத்தா ஐகோர்ட்டில் அந்த மாநிலத்தில் உள்ள சேவை நிறுவனம் ஒன்று சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த கோர்ட்டு ஒதுக்கீடு செய்தது சரியே என்று தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த சேவை நிறுவனம் சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்தது. இந்த அப்பீல் மனுமீதான விசாரணை நீதிபதி கங்குலி தலைமையிலான பெஞ்சில் நடைபெற்றது. விசாரணை முடிவில் தீர்ப்பு அளித்த நீதிபதி கங்குலி, மேற்குவங்க அரசானது கிரிக்கெட் வீரர் கங்குலிக்கு ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்தது. அந்த நிலத்தை திருப்பி ஒப்படைக்கவும் கங்குலிக்கு உத்தரவிட்டது. மேலும் நிலத்திற்கு கங்குலி கட்டிய பணத்தை அவருக்கு திருப்பி கொடுக்கவும் அரசுக்கு நீதிபதி கங்குலி உத்தரவிட்டார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: