தமிழ்நாட்டில் 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 29 - தமிழ்நாட்டில் 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து அரசு ஆணையில் கூறியிருப்பதாவது:- 1.இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை முன்னாள் முதன்மை  செயலாளர் ஜி.முத்துசாமி சமூக சீர்த்திருத்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார்.  2.பால் உற்பத்தி கால்நடை மேம்பாட்டுத்துறை முன்னாள் ஆணையர் அபூர்வாவர்மா தொழிற்சாலை மற்றும் வணிகத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
3.தொழிற்சாலைகள் ஆணையர் ஹர்மந்தா சிங் அங்கிருந்து மாற்றப்பட்டு போக்குவரத்து ஆணையராக நியமிக்கப்பட்டார். 4.தமிழ்நாடு மாநில மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் முன்னாள் நிர்வாக இயக்குனர் சந்தீப் சக்சேனா மாற்றப்பட்டு விவசாயத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
5.கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை முன்னாள் செயலாளர் எம்.பி. நிர்மலா மாற்றப்பட்டு நில சீரமைப்புத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
6.பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிறப்பட்டோர் நலத்துறை முன்னாள் செயலாளர் மாலிக் பெரோஸ்கான் பிற்பட்டோர் பிரிவு ஆணையராக நியமிக்கபக்பட்டார்.
7.பொதுப்பணித்துறை முன்னாள் செயலாளர் கே.தனவேல் மாற்றப்பட்டு தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர் செயலாவகாக மியமிக்கப்பட்டார்.
8.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முன்னாள் செயலாளர் தங்கலியபெருமாள் வேளாண்மை சந்தை மற்றும் வேளாண்மை வர்த்தகத்துறை ஆணையராக பொறுப்பு ஏற்பார்.
9.ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் முன்னாள் ஆணையர் சுதீப்ஜெயின் அரசு டேட்டா சென்டர் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
10.சோசியல் டிபென்ஸ் முன்னாள் இயக்குனர் மதிவாணன் நகர் நிலப்பிரிவு மற்றும் நகர்புற நிலவரித்துறை இயக்குனராக பதவி ஏற்பார்.
11.மாநில மாற்றுத்திறனாளிகள் முன்னாள் ஆணையர் சி.டி.மணிமேகலை மாற்றப்பட்டு மாநில மனித உரிமை ஆணைய செயலாவகா நியமிக்கப்பட்டார்.
12.ஒழுங்கு நடவடிக்கைத்துறை ஆணையர் ஜெயஸ்ரீரகுநந்தன் மாற்றப்பட்டுஅனைவருக்கும் கல்வி திட்ட மாநில திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
13.தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய தலைவர் விஸ்வநாத் ஏ.ஷெகாங்கர் அங்கிருந்து மாற்றப்பட்டு தமிழ்நாடு தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
14.நிலநிர்வாகத்துறை ஆணையர் ஹேமந்த்குமார் சின்கா மாற்றப்பட்டு தொழிலாளர்த்துறை ஆணையராக நியமிக்ககப்பட்டார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்: