2030ல் உணவுப்பொருள் விலை 2 மடங்கு அதிகரிக்கும்

Image Unavailable

லண்டன், ஜூன்.2 - 2030ல் உணவுப்பொருட்களின் விலை 120 சதவீதம் முதல் 180 சதவீதம் வரை உயர்ந்திருக்கும். இந்த உயர்வுக்கு பருவநிலை மாற்றமே 50 சதவீதம் காரணமாக இருக்கும் என்று ஆக்ஸ்பாம் (சர்வதேச கூட்டமைப்பு) கூறியுள்ளது. சர்வதேச கூட்டமைப்பு 98 நாடுகளில் வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது. 2030 ஆண்டு கால கட்டத்தில் உணவுப்பொருட்களின் விலைகள் 2 மடங்கிற்கு மேல் கூடுதலாக இருக்கும். இதற்கு பருவநிலை மாற்றமே காரணமாக இருக்கும் என்று இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்வதற்கு உலக தலைவர்கள் ஒன்று கூடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் போதிய நிலம், நீர் மற்றும் சக்தி இல்லாத நிலைமையில் உணவுப்பொருட்களின் விலை தாறுமாறாக்கூடி பொதுமக்களுக்கு மிகுந்த துன்பத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. கவுடி மாலா என்ற நாட்டில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் போதிய உணவின்றி அவதிப்படுகின்றனர். அவர்கள் அயல்நாடுகளின் உணவு இறக்குமதியை எதிர்பார்த்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக அஜர்பைசானில் கோதுமை உறஅபத்தி 33சதவீதம் குறைந்துள்ளது. இதனால் அவர்கள் ரஷ்யா, கஜகஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து உணவு பொருட்கள் இறக்குமதி செய்யவேண்டியிருந்தது. உலகமெங்குமே உணவுப்பொருட்களின் விலை சென்ற ஆண்டைக்காட்டிலும் 20 சதவீதம் அதிகரித்து காணப்படுகிறது. உணவுப்பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் உலகில் பல லட்ச மக்கள் பட்டினியால் பரிதவிக்கும் அபாயநிலை உருவாகியுள்ளது என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் 80 லட்சம் மக்கள் உணவுப்பற்றாக்குறையால் அவதிப்படுகிறார்கள் என்று சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ