முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை வாரிய செயலாளருக்கு ஜெயவர்த்தனே கண்டனம்

புதன்கிழமை, 9 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

கொழும்பு, ஏப்.10 - வங்காளதேசத்தில் 20 ஓவர் உலக கேப்பை போட்டி நடைபெற்ற போது ஜெயவர்த்தனே, சங்ககரா 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் முடிவை தெரிவித்தனர். முதலில் ஜெயவர்த்தனே உலக கோப்பை போட்டிக்குப் பிறகு 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து சங்ககாராவும் இந்த முடிவை அறிவித்தார்.

இந்த ஓய்வு தொடர்பாக இருவர் மீது இலங்கை தேர்வுக் குழு தலைவரும், முன்னாள் வீரருமான ஜெயசூர்யா குற்றம்சாட்டியிருந்தார். ஜெயவர்த்தனே, சங்ககரா ஓய்வு பெறும் முடிவு எனக்கு முதலில் தெரியாது. இருவரிடமும் நான் வெளிப்படையாகவே இருந்தேன். இது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையை வென்று நாடு திரும்பிய இலங்கை அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு முடிந்த சில மணி நேரங்களில் ஓயவு செய்தி தொடர்பாக இலங்கை கிரிக்கெட் செயலாளர் நிஷந்தா ரனதுங்கா மீது ஜெயவர்த்தனே, சங்ககரா பாய்ந்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: 

ஓய்வு குறித்து எந்த மீடியாவுக்கு நாங்கள் தெரிவித்தோம் என்பது பற்றி எங்களிடம் எதுவும் கேட்காமல் தெரிவித்தது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் எங்களை பற்றி சில கருத்துக் களை விமரிசித்து மீடியாகளுக்கு தெரிவித்து இருக்கிறார். இது வருத்தம் அளிக்கிறது. ஒரு பொருப்புள்ளவர்களாக இருந்தால் அவர் இப்படி செய்து இருக்கமாட்டார். நாங்கள் என்ன அறிவித்தோம் என்பது பற்றி அவர் முதலில் எங்களிடம் கேட்டிருக்க வேண்டும். பின்னர் இந்த கருத்துத் தொடர்பாக தேர்வுக் குழுவினரிடம் பேசினோம். ஓய்வு செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியதற்கு வாரிய செயலாளர் தான் முழு பொருப்பாவார்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்