முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்தாவின் சுயநல ரயில்வே பட்ஜெட் - ஜெயலலிதா

வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, பிப்.26 - மத்திய ரயில்வே பட்ஜெட் மம்தாவின் சுயநல பட்ஜெட் என்றும், தன் சொந்த மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு பட்ஜெட்டை தயாரித்துள்ளார் என்றும் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார். 

மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று 2011-2012-ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட்டில் ரயில்வே வளர்ச்சிக்கும், ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களின்  முன்னேற்றத்திற்கும் எந்தவித திட்டமும் இல்லை. ரயில்போக்குவரத்தை அதிகரிக்கவும் எந்தவித புது திட்டமும் அறிவிக்கவில்லை. ஆனால் அவரது சொந்த மாநிலமான மேற்குவங்காளத்தில் மட்டும் பல்வேறு திட்டங்களை மம்தா அறிவித்துள்ளார். நந்திகிராம் மற்றும் சிங்கூரில் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். 

மம்தா பானர்ஜியின் ரயில்வே பட்ஜெட் குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்த பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அந்த அளவில் இது ஒரு சாதாரண மனிதன் பட்ஜெட் என்றே கூறலாம். பல புதிய ரயில்வே திட்டங்களையும் பட்ஜெட்டில் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அதேசமயத்தில் கடந்த ஆண்டு அவர் தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் இன்னும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அவைகளை நிறைவேற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் பல புதிய திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையின் நிதிநிலைமையோ மிகவும் மோசமாக இருக்கிறது. மோசமாக இருக்கும் நிதிநிலைமையை சரிக்கட்டி வருவாயை பெருக்க எந்தவித திட்டமும் பட்ஜெட்டில் இல்லை. இது தேசிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். உலகின் மிகப்பெரிய இந்திய ரயில்வேயின்  வளர்ச்சியை  கடுமையாக பாதிப்பதோடு அதனை பின்னுக்கு தள்ளும் பட்ஜெட்டாக இது உள்ளது. ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கென்று குறிப்பிடத்தக்க திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. சில புறநகர் ரயில்களும், ஓரிரு துரந்தோ ரயில்களும் விடப்படும் என்று மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தமிழகத்திற்கு என்று புதிய ரயில்கள் விடும் அறிவிப்பு எதுவும் பட்ஜெட்டில் இல்லை. 

மேற்குவங்காள மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. மேற்குவங்காளம் மம்தா பானர்ஜியின் சொந்த மாநிலமாகும். அங்கு விரைவில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு இந்த ரயில்வே பட்ஜெட்டை திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜி தயாரித்துள்ளார். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாநிலத்தில் உள்ள நந்திகிராம் மற்றும் சிங்கூரில் அவர் வெற்றிகரமான அரசியல் போராட்டத்தை நடத்தினார். அதனால் அந்த நகரங்களில் பெரிய அளவில் ரயில்வே பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புகளின் மூலம் தன்னுடைய அரசியல் எண்ணங்களையும், ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்ள தேசிய வளங்களை அவர் மேற்குவங்காளத்திற்கு கடத்திச்  சென்றுள்ளார் என்பதை ஒதுக்கித்தள்ளவோ அல்லது மறுக்கவோ முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago