2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - அருண்ஷோரி ஆஜர்

25arunshourie

 

புது டெல்லி,பிப்.26 - ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை நாட்டுக்கு ஏற்படுத்திய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அருண்ஷோரி நேற்று சி.பி.ஐ. முன்னிலையில் ஆஜரானார். 

டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்திற்குள் நுழைவதற்கு முன்னால் அருண்ஷோரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறிய அவர், மத்திய அரசை சரமாரியாக குற்றம் சாட்டினார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உண்மையான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பவே மத்திய அரசு முயல்கிறது என்று குற்றம் சாட்டினார். மத்திய அரசின் வாதங்கள் குப்பைத்தனமான வாதங்களாக இருப்பதாகவும் அருண்ஷோரி குற்றம் சாட்டினார். வாஜ்பாய் அரசில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருநதவர் அருண்ஷோரி. 

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக ஆஜராகுமாறு இவருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது. அதை ஏற்று நேற்று அருண்ஷோரி சி.பி.ஐ. முன்னிலையில் ஆஜரானார். அதற்கு முன் நிருபர்களை சந்தித்த அவர், எந்த வகையில் எல்லாம் உதவ முடியுமோ அந்த வகையில் எல்லாம் சி.பி.ஐ.க்கு உதவத் தயார் என்று குறிப்பிட்டார். பல்வேறு விவரங்கள் அடங்கிய 50 பக்க ஆவணத்தை தாம் தயாரித்திருப்பதாகவும் அதை சி.பி.ஐ.யிடம் தாக்கல் செய்யப் போவதாகவும் அருண்ஷோரி தெரிவித்தார். 

முதலில் வந்தவருக்கே முன்னுரிமை என்ற கொள்கை பின்பற்றப்பட்டதோ, இல்லையோ ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசா பணம் சம்பாதிததது உண்மை என்றும் அருண்ஷோரி தெரிவித்தார். அரசின் கவலை எல்லாம் பின்பற்றப்பட்ட கொள்கை பற்றி அல்ல. அதன் கவலை வேறு விதமாக இருப்பதாகவும் அருண்ஷோரி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ