முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது போலீஸ் தடியடி

சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப். 25 -​மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க்கோரி போராட்த்தில் ஈடுபட்ட தமிழக அரசு ஊழியர்கள் மீது தடியடி செய்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான படிகள், நிலுவையில் உள்ள சம்பளத்தொகை ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சேப்பாக்கம் குறளகம் வளாகத்தில் கடந்த 22​ந்தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. 

இதில் சுமார் 500​க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், சாலைப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். நேற்று காலையில் அவர்கள் குறளகம் அருகே திடீரென்று சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் சேப்பாக்கம் வழியாக அண்ணா சதுக்கம் செல்லும் வாகன போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று தடுப்பு வேலிகள் அமைத்து போக்குவரத்தை சீர் செய்தனர். 

மதியம் 1 மணியளவில் மறியலில் ஈடுபட்டிருந்தவர்கள் திடீரென்று சட்டசபை நோக்கி ஓடினார்கள். தடுப்பு வேலிகளை அலாக்காக தூக்கி வீசி விட்டு அவர்கள் ஓடினார்கள். ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஓடியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்கு நின்ற போலீசாரும் செய்வதெறியாமல் திகைத்தப்படி அவர்களை பின் தொடர்ந்து ஓடினார்கள். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் போலீசாரின் முயற்சி பலனளிக்கவில்லை. போலீசாரை தள்ளி விட்டு மின்னல் வேகத்தில் ஓடினார்கள். 

இதையறிந்து அந்த பகுதிக்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இணை கமிஷனர் சாரங்கன், துணை கமிஷனர்கள் மயில் வாகனன், லட்சுமி, உதவி கமிஷனர் தமிழ்ச்செல்வன் ஆகியோரும் நேரடியாக களத்தில் இறங்கி அவர்களை தடுத்தனர். அதற்குள் போலீசில் ஒரு பிரிவினர் சட்டசபை அருகில் உள்ள திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் முன்பு போலீஸ் வேன்களை நடு ரோட்டில் குறுக்கே நிறுத்தி தடுப்பை ஏற்படுத்தினார்கள். ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் அதையும் மீறி சட்டசபையை நோக்கி ஓட முயன்றனர்.   நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்த போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். போலீசார் விரட்டியடித்ததும் அரசு ஊழியர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். தடியடியில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல் ஆனது. 

அங்கு நின்ற பொதுமக்களும் சிதறி ஓடினார்கள். ஒரு சிலர் அடியையும் வாங்கி கொண்டு ஆவேசமாக கோஷம் எழுப்பியபடி நடுரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். அவர்களை குண்டு கட்டாக தூக்கி போலீசார் அப்புறப்படுத்தினார்கள். பின்னர் அவர்களை கைது செய்தனர். போராட்டம் காரணமாக அந்த வழியாக சென்ற இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்