முக்கிய செய்திகள்

``முழுமையான'' சமச்சீர் கல்வியை கொண்டு வருவோம் - முதல்வர்

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூன்.8 - கடந்த தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வி திட்டத்தை முழுமையாக பரிசீலித்து அதிலுள்ள குறைபாடுகளை போக்கி, ``முழுமையான'' சமச்சீர் கல்வி திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என சட்டபேரவையில் ஜெயலலிதா உறுதிபட கூறினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று சட்டமன்ற பேரவையில், 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறை (திருத்த) சட்டமுன்வடிவு மீதான விவாதத்தின்போது குறுக்கிட்டு ஆற்றிய உரை:-

பேரவைத் தலைவர், இந்தச் சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்தும்போதே பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் இதை அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாகத் தெரிவித்தார்.  இது சம்பந்தமாக அவருடைய கட்சியின் தலைவர் ஜி.கே. மணி ஏற்கெனவே இந்த அவையில் என்ன பேசியிருக்கிறார் என்று அனைவருக்கும் தெரிவிப்பது பயன் உள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன்.  சமச்சீர் கல்வித் திட்டம் மிக அவசரமாகச் செயல்படுத்தக்கூடியது அல்ல.  அனைவருக்கும் தரமான கல்வி வழங்கப்படவேண்டுமெனில் டாக்டர் முத்துக்குமரன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.  இதைத்தான் இந்த சட்டம் இந்த மன்றத்திலே அறிமுகப்படுத்தப்பட்டபோது  அனைத்து கட்சிகளும் எடுத்துக் கூறியுள்ளன.  பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ஜி.கே. மணி தெரிவித்த கருத்தை நான் இங்கே நினைவுபடுத்த விழைகிறேன்.

தமிழக அரசின் சார்பிலே சமச்சீர் கல்வி முறை கொண்டுவரப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மனப்nullர்வமாக ஏற்றுக்கொள்கிறோம்.  ஆனால் இப்போது கொண்டு வந்திருக்கிற இந்தச் சட்டமுன்வடிவிலே மிகப்பெரிய திருத்தங்கள் எல்லாம் செய்யப்படவேண்டும்.  இப்போது நீnullங்கள் கொண்டுவந்துள்ள சட்டமுன்வடிவு என்பது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கின்றது.  பிரிவு வாரியாக என்று சொன்னால் நிறைய சொல்லலாம்.  இருந்தாலுங்கூட டாக்டர் முத்துக்குமரன் அறிக்கையில்  என்ன பரிந்துரை சொன்னார்களோ அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.  இந்தச் சமச்சீர் கல்வித் திட்டத்தை  நீnullங்கள் மறு பரிசீலனை செய்யவேண்டும்.  இப்போதே நிறைவேற்றாமல் கல்வி வல்லுநர்கள் கொண்ட குழுவை அமைத்து இன்னும் முழுமையாக ஆய்வு செய்து, கருத்துக் கேட்டு நடைமுறைப்படுத்தவேண்டும்.

என்று கருத்து தெரிவித்துள்ளார்.  இதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட கருத்து.  இதில் அவர்கள் நிற்கிறார்களா இல்லையா என்பதை அவர்கள் தெரிவித்தால் நல்லது.  பேரவைத் தலைவர், இதற்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பாலகிருஷ்ணன்  பேசுகின்றபோது, ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டது 1 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை என்று குறிப்பிட்டார்.  ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டது 1 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை அல்ல.  1 ஆம் வகுப்பு மற்றும் 6 ஆம் வகுப்பு மட்டும்தான்.  ஆகவே, முழுமையாக மறுபரிசீலனை செய்து முழுமையான சமச்சீர் கல்வித் திட்டத்தை கொண்டு வருவதுதான் எங்களுடைய எண்ணம்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: