முக்கிய செய்திகள்

கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடத்தப்படும் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்

புதன்கிழமை, 8 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.- 8 - கூட்டுறவு சங்க தேர்தல் பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் வழக்காக உள்ளதால் நீதிமன்ற தீர்ப்பு பெற்றவுடன் முறையாக கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குணசேகரன் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படாததால் மத்திய அரசு ஒதுக்கீய ரூ.800 கோடி கிடைக்கவில்லை. ஆகவே கூட்டுறவு சங்க தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் என்றார்.

அப்போது குறிக்கீட்டு பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூட்டுறவு சங்க தேர்தல் சம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் நீதிமன்ற தீர்ப்பு வந்தால் தான் தேர்தல் நடத்த முடியும் நீதிமன்றதீர்ப்பு வெளியானவுடன் முறையாக தேர்தல் நடத்துவோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: