முக்கிய செய்திகள்

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

புதன்கிழமை, 8 ஜூன் 2011      ஆன்மிகம்
Image Unavailable

பழனி, ஜூன்.- 8 - பழனி முருகன் மலைக்கோவிலில் வைகாசி விசாகத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பழனி முருகன் கோவில் வைகாசி விசாகத்திருவிழா புகழ்பெற்றது. இத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் விரதமிருந்து பால்குடம் எடுத்து வருவார்கள். பின்னர் முருகப்பெருமானுக்கு தாங்கள் கொண்டு வந்த பாலை அபிஷேகம் செய்து மகிழ்வார்கள். இந்த திருவிழாவின் கொடியேற்று விழா பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று காலை 10.45 மணிக்கு துவங்கியது. 11.45 மணிக்கு சேவலும், மயிலும், வேலும் பொறித்த மஞ்சள் நிறக்கொடி தங்க கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி பெருக்கில் முழக்கமிட்டனர். இந்த விழாவில் பழனி கோவில் நிர்வாக அதிகாரி ராஜா, துணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி ஆணையர் நடராஜன், பெரியநாயகி கல்வி அறக்கட்டளை நிர்வாகி சுந்தரம் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: