முக்கிய செய்திகள்

கூடுதலாக தங்கம் வசூலித்துக் கொடுங்கள் கம்யூ. எம்.எல்.ஏ.விடம் முதல்வர் நகைச்சுவை

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன் - 9 - திருமண உதவித் திட்டத்தின்கீழ் திருமாங்கல்யத்திற்கு 6 கிராம் தங்கம் வழங்க வேண்டும் என்று கேட்ட கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.விடம், கூடுதலாக நீங்களே 2 கிராம் தங்கம் வசூலித்து கொடுங்கள் என்று ஜெயலலிதா நகைச்சுவையாக குறிப்பிட்டார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. சு.குணசேகரன் பேசினார். அப்போது திருமண உதவித் திட்டத்தின்கீழ் திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கம் அரசு கொடுப்பது பாராட்டுக்குரியது. அதே வேளையில் எங்கள் பகுதியில் பெண்கள் திருமாங்கல்யம் 6 கிராமில்தான் அணிவார்கள். தேர்தல் பிரசாரத்தின்போது நீங்கள் முதல்வராக வருவீர்கள் என்கிற நம்பிக்கையில் 6 கிராம் தங்கம் வாங்கித் தருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டேன். அதனால் கூடுதலாக 2 கிராம் சேர்த்து 6 கிராமாக கொடுத்தால் நன்றா இருக்கும் என்றார். 

அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, நீங்கள் வேண்டுமானால் உங்கள் தொகுதி மக்களுக்கு கூடுதலாக 2 கிராம் தங்கம் வசூலித்துக் கொடுங்கள். நாங்கள் 4 கிராம் தங்கம் கொடுக்கிறோம் என்று கூறினார். இதனால் பேரவையில் கலகலப்பு ஏற்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: