முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் பாதுகாப்புக்கு புதுப்புது அச்சுறுத்தல்கள்: ஜனாதிபதி பிரதீபா

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

டேராடூன்,ஜூன்.- 13 - நாட்டின் பாதுகாப்புக்கு புதுப்புது வகையில் அச்சுறுத்தல்கள் ஏற்படுவதாகவும், அதை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு படைகளின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் தெரிவித்தார்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியின் 546 வது படை பிரிவில் பயிற்சி பெற்ற வீரர்கள் படையில் சேரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜனாதிபதி, படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது. அந்த அச்சுறுத்தல் பல்வேறு கோணங்களில் ஏற்படுகிறது. இதை எதிர்கொள்ளும் வகையில் நமது படையும் தயார்படுத்தி கொள்ள வேண்டும்.
நவீன யுக்திகளை கையாள வேண்டும். புதிய புதிய கண்டுபிடிப்புகளை படையில் புகுத்த வேண்டும். நமது படை வீரர்கள் எந்த சவாலையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும். நாட்டின் கவுரவம் பாதுகாக்கப்பட வேண்டும். அதுதான் உங்கள் முன் உள்ள முதல் பணி. உங்களது நடத்தை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்றார். பயிற்சி முடித்தவர்களில் வெளிநாடுகளை சேர்ந்த 17 வீரர்களும், நேபாளத்தை சேர்ந்த 2 பேரும் அடங்குவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony