எம்.பி.பி.எஸ். போலி மதிப்பெண் சான்றிதழ் ரூ.1 லட்சம்

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

பெங்களூர்,ஜூன்.16 - கர்நாடகாவில் எம்.பி.பி.எஸ். போலி மதிப்பெண் சான்றிதழ்கள் ரூ. ஒரு லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலத்தில் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பணம் கொடுத்து பாசாகி இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து மாநில அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டது. பெங்களூரில் உள்ள அல் அமீன் பல் மருத்துவக் கல்லூரி, குல்பர்கா, தும்கூர், சித்ரதுர்கா ஆகிய நகரங்களில் செயல்பட்டு வரும் 7 மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படித்த மாணவர்களில் சிலர் போலி மதிப்பெண்கள் மூலம் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். கூடுதலாக வழங்கப்படும் ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும் ரூ. ஒரு லட்சம் வீதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசடிகடந்த 2006 ல் இருந்து நடைபெற்று வருகிறதாம். இந்த விவகாரத்தில் 18 மாணவர்கள் சிக்கியுள்ளனர். இவர்களது சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் போலி மதிப்பெண் மூலம் மருத்துவர்களானவர்களுடைய மதிப்பெண் சான்றிதழும் ரத்து செய்யப்படும் என்று மருத்துவ கல்வி துறை மந்திரி ராம்தாஸ் உறுதியளித்துள்ளார். போலி மதிப்பெண் சான்றிதழ் பெற்று பலர் டாக்டர்களாக பணிபுரிந்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த போலி மதிப்பெண் விவகாரம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: