முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்டு 1ம் தேதி தொடங்குகிறது

புதன்கிழமை, 22 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜூன் - 22 - பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர் வருகிற ஆகஸ்டு மாதம் 1 ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 8 ம் தேதிவரை நடைபெற உள்ளது. நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை வருகிற ஆகஸ்டு 1 ம் தேதிமுதல் செப்டம்பர் 8 ம் தேதிவரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்டு 1 ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8 ம் தேதி முடிவடையும் என்றார்.
ஆகஸ்டு 1 ம் தேதிமுதல் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை கூட்டுமாறு ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு பரிந்துரை செய்வது என இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்த பரிந்துரையை ஏற்று பாராளுமன்றத்தின் இரு சபைகளையும் ஆகஸ்டு 1 ம் தேதி ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கூட்டுவார் என்றும் அவர் கூறினார். இந்த மழைக்கால கூட்டத்தொடர் மிகவும் தாமதமாக கூட்டப்படுகிறதா என்று கேட்டதற்கு இதற்கு முன்புகூட பாராளுமன்றம் ஆகஸ்டு மாதத்தில் கூட்டப்பட்டுள்ளது என்று பன்சால் பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago