முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரிட்சை

சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

பெங்களூர், பிப். 27 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெங்களூரில் இன்று நடக்க இருக்கும் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. இன்றைய ஆட்டம் கடும் சவால் மிக்கதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பி பிரிவில் இடம் பெற்று உள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பெங்களூர் சின் னசாமி அரங்கத்தில் பலப்பரிட்சை நடத்த உள்ளன. பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி துவங்குகிறது. 

இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வங்காளதேச அணியை சந்தித்தது. இதில் இந்திய அணி 87 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களது முதல் ஆட்டத்தில் போராடி தான் வெற்றி பெற்றன. 

எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய அணி வீரர்கள் இம்முறை தீவி ர பயிற்சிக்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர். இதுவே தற்போது சிக்கலை யும் உருவாக்கி உள்ளது. சேவாக், யுவராஜ் சிங், சச்சின் உள்ளிட்ட முக்கியமான நட்சத்திர வீரர்கள் காயம் அடைந்து உள்ளனர். 

இதில் சேவாக்கின் நிலை மோசமாக உள்ளது. நேற்று முன்  தினம் பயிற்சியின் போது அவருக்கு விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. அணி நிர்வாகம் தரப்பில் சேவாக்கிற்கு பெரிய அளவில் காயம் ஒன்றுமில்லை என தெரிவிக்கப்பட்டாலும் இன்றைய ஆட்டத்தில் சே வாக் உறுதியாக களம் இறங்குவாரா?  என கூற முடியாது. 

இந்திய அணி பேட்டிங் வரிசை எப்போதும் போலவே அதீத பலமாக உள்ளது. சச்சின், சேவாக், காம்பீர், கோக்லி, தோனி, யுவராஜ் சிங், யூசுப் பதான் என நீண்டு கொண்டே போகிறது. 

கடைசி கட்டத்தில் ஜாஹிர்கான், ஹர்பஜன் சிங் கூட கைகொடுக்கும் நிலைக்கு உருவாக்கப்பட்டு உள்ளனர். ஸ்ரீசாந்த், முனாப்படேல், ஆகி யோர் மட்டுமே சொதப்பக் கூடியவர்கள். இதில் சேவாக், கோக்லி நல்ல பார்மில் உள்ளனர். 

சச்சின் முதல் ஆட்டத்தில் துரதிர்ஷ்டமாக ரன் அவுட்டானார். இதனா ல் இன்றைய ஆட்டத்தில் அவர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியி ல் அதிகம் காணப்படும். யுவராஜ் சிங், தோனி, யூசுப் பதான் ஆகி யோர் தங்களது பங்கிற்கு அதிரடி காட்டினால் இமாலய ஸ்கோரை குவிக்கலாம். 

இன்றைய ஆட்டத்தில், இந்திய அணி 2 வேகப் பந்து வீச்சாளர், 2 சுழற் பந்து வீச்சாளருடன் களமிறங்க வாய்ப்புள்ளது. சாவ்லா இடம் பெறு ம் பட்சத்தில் முனாப் படேல் அல்லது ஸ்ரீசாந்த் நீக்கப்படக் கூடும். 

இங்கிலாந்து, அணி நெதர்லாந்திடம் தப்பித்தோம், பிழைத்தோம் என்ற நிலையில் தான் ஜெயித்தது. இதனால் அந்த அணி இன்றைய ஆட்ட த்தில் எச்சரிக்கையுடன் ஆடும். 

இந்திய வீரர்கள் ஷாட் பிட்ச் பந்து வீச்சில் திணறக் கூடியவர்கள் என்ப தால், அந்த வகையான பந்து வீச்சை ஆயுதமாக பயன்படுத்த இங்கி லாந்து அணி வியூகம் வகுக்கக்கூடும். ஆண்டர்சன், கிறிஸ் பிராட் ஆகி யோர் ஷாட் பிட்ச் பந்துகளை வீசுவதில் வல்லவர்கள். 

ஸ்ட்ராஸ், பீட்டர்சன், பொபாரா, காலிங்வுட், பிரையர், டிராட், லுக் ரைட் மற்றும் பெர்ச்சனன் என நீண்ட பேட்டிங் வரிசை உள்ளது. சுவா னின் சுழல் நெருக்கடி கொடுக்கும். மித வேகப் பந்து வீச்சில் டிரெம்லெட் அசத்தக் கூடியவர். 

பீட்டர்சன், ஐ.பி.எல். போட்டிகளில் பெங்களூர் அணியில் ஆடி உள்ளதால், பிட்ச் தன்மையை அறிந்து வைத்துள்ளார். இது அந்த அணியின் வியூகத்திற்கு உறுதுணையாக இருக்கும். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் எல்லா வகையிலும் பலம் படைத்த வகையாக இருப்பதால், இன்றைய ஆட்டத்தில் கடும் சவால் இருக்கும். ரசிகர்களுக்கு இந்த ஆட்டம் மிகப் பெரிய விருந்தா க அமையும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்