எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூன்.27 - ரூ.1.76 லட்சம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு முன்பு டிராய் முன்னாள் தலைவர்கள் மற்றும் தொலைதொடர்புத்துறை முன்னாள் செயலாளர்கள் ஆகியோர் அடுத்தமாதம் ஆஜராகி சாட்சியம் அளிக்கிறார்கள்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த குழுவானது அடுத்த மாதத்தில் இருந்து சாட்சிகளிடத்தில் விசாரணையை தொடங்குகிறது. முதலில் இந்திய தொலைதொடர்பு கட்டுப்பாடு ஆணையத்தின் முன்னாள் தலைவர்கள் 2 பேர் மற்றும் தொலைதொடர்புத்துறை முன்னாள் செயலாளர்கள் ஆகியோர் அடுத்தமாதம் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கிறார்கள். மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம்,தொலைதொடர்புத்துறை முன்னாள் ஆணையர் பி.ஜே.தாமஸூம் பார்லிமெண்டரி கூட்டுக்குழு முன்பு ஆஜராகி சாட்சியம் அளிக்கிறார். 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் கூட்டுசதி,மோசடி, ஏமாற்றுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொலைதொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெஹூராவும் பாராளுமன்ற கூட்டுக்குழு முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளிக்கிறார். ஸ்பெக்டரம் ஒதுக்கீடு குறித்து கடந்த 1998-ம் ஆண்டில் இருந்து 2009 வரை விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டுக்குழுவானது தனது விசாரணையை முடித்து பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி காலமான செப்டம்பர் 8-ம தேதி அறிக்கையை தாக்கல் செய்யலாம் என்று தெரிகிறது. கூட்டுக்குழுவின் 4 கூட்டங்கள் வருகின்ற 7-முதல்11-ம் தேதி வரை நடக்கிறது. அதன் பின்னர் தொலைதொடர்புத்துறையின் 9 முன்னாள் செயலாளர்கள், இந்திய தொலைதொடர்பு கட்டுப்பாடு ஆணையத்தின் 4 முன்னாள் தலைவர்களின் வாக்குமூலத்தை கூட்டுக்குழு அப்போது பதிவு செய்யும் என்று தெரிகிறது. பார்லி.கூட்டுக்குழுவின் முன்பு முதலில் ஏ.வி கோகாக் ஆஜராகி சாட்சியம் அளிப்பார். இவர் கடந்த 1996-ம் ஆண்டில் இருந்து 1998-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை தொலைதொடர்புத்துறை செயலாளராக பணியாற்றினார். அதனையடுத்து வினோத் வைஷ், ஷியாமல்கோஷ், அனில் குமார், நிர்பேந்திரா மிஷ்ரா, ஜே.எஸ்.சர்மா, சித்தார்த்த பெஹூரா, தினேஷ் மாத்தூர், பி.ஜே. தாமஸ் ஆகியோர் முறையே ஆஜராகி வாக்குமூலம் அளிக்கலாம் என்று தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


