நிதி பற்றாக்குறையால் உள்கட்டமைப்பு திட்டங்கள் பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.1 - நிதி பற்றாக்குறை, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பல பிரச்சினைகளால் மத்திய அரசு நிர்வகிக்கும் உள்கட்டமைப்பு துறையின் திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு (அசோசம்) பெரும் கவலையை தெரிவித்துள்ளது. இதுகுறித்து  அசோசம் பொதுச்செயலாளர் டி.எஸ். ரவாத் நேற்று புதுடெல்லியில் நேற்று கூறியதாவது:-

உள்கட்டமைப்புதுறையின் திட்டங்களை மத்திய அரசு நிர்வகித்து வருகிறது. உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதில் பல்வேறு இடர்பாடுகள் உள்ளன. இந்த இடர்பாடுகளால் திட்டத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றமுடியாததோடு செலவும் 15 சதவீதம் அதிகரிக்கிறது. நிலம் கையகப்படுத்துதல், நிதி பற்றாக்குறை, சுற்றுப்புற சூழல் அனுமதி பெறுதல் ஆகியவைகள் பெரும் தடங்களாக உள்ளன. அதுவும் சுற்றுப்புறசூழல் அனுமதி பெறுவதில் ஏற்படும் தாமதமானது திட்டங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிப்பதற்கு பெரும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுவது தொடர்பாக மத்திய புள்ளிவிபரம் மற்றும் திட்ட நிறைவேற்றுதல் அமைச்சகத்தின் சார்பாக ஒரு அறிக்கை தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதில் ஆண்டுதோறும் காலதாமதம் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே போகிறது என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு ராவத் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: