முக்கிய செய்திகள்

தங்கம் விலை குறைந்தது

Image Unavailable

சென்னை, ஜுலை 2 - தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 136 குறைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கம் விலை தொடர்ந்து அதிரடியாக உயர்ந்தது. ஒரு பவுன் ரூ. 17 ஆயிரத்தை தாண்டியது. இதனால் ஏழை எளிய மக்கள் பெரும் கவலையில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் தங்கம் விலை தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியது. நேற்று முன்தினம் பவுன் ரூ.16,536 ஆக இருந்தது. நேற்று மட்டும் ஒரே நாளில் ரூ. 136 குறைந்து பவுன் ரூ.16,400 ஆனது. ஒரு கிராம் ரூ.2050 க்கு விற்கிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்ததும், அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததும் இந்த விலை சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் தற்போது திருமண சீசன் குறைவாக உள்ளதும் தங்கத்தின் விலை சரிவுக்கு மற்றொரு காரணமாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் வெள்ளியின் விலை எப்போதும்போல் கிராம் ஒன்றுக்கு ரூ. 53.35 ஆக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: