புதுடெல்லி,ஜூலை.2 - நாட்டின் ஏற்றுமதி கடந்த ஆண்டு மே முதல் இந்தாண்டு மே மாதம் முடிய 56.9 சதவீதம் அதிகரித்து 25.9 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நடந்தது அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சந்தையில் தேவை அதிகரித்ததுதான் ஏற்றுமதி உயர்வுக்கு காரணமாகும்.
அதேசமயத்தில் இறக்குமதியும் எப்போதும் இல்லாத அளவுக்கு அதகரித்து. இதே காலக்கட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது 54.08 சதவீதமாக அதிகரித்தது. அதாவது 40.9 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இறக்குமதி அதிகரித்தது. வர்த்தக பற்றாக்குறை 14.9 பில்லியன் அமெரிக்க டாலர் என்று மத்திய வர்த்த அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், எண்ணெய் இல்லாத பொருட்கள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டது என்று மத்திய வர்த்தகத்துறை செயலாளர் ராகுல் குல்லார் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.