முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மநாபசுவாமி கோவில் நகைகள் மதிப்பு ரூ.ஒரு லட்சம் கோடி...!

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருவனந்தபுரம்,ஜூலை.3 - உலகிலேயே மிகப் பெரிய பணக்கார கடவுளாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியா முழுக்க அசையா சொத்துக்கள் இருக்கின்றன. ஆந்திராவில் மட்டும் திருப்பதி கோவில் பெயரில் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கணக்கீடு செய்யப்பட்ட போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ. 53 ஆயிரம் கோடிக்கு அசையும், அசையா சொத்துக்கள், நகைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தங்க, வைர நகைகள் மட்டும் 20 டன் அளவுக்கு உள்ளது. இந்த நகைகளில் பல 12 ம் நூற்றாண்டு காலத்தில் செய்யப்பட்டவை ஆகும். கலைநயமிக்க இந்த நகைகள் போன்று இந்தியாவில் வேறு எந்த கோவிலிலும் இல்லை என்று கருதப்படுகிறது. 

இந்த நிலையில் தற்போது திருவனந்தபுரத்தில் பத்மநாபசுவாமி கோவில் கருவறை அருகே 6 பாதாள அறைகளில் இருந்து எடுக்கப்பட்டு வரும் தங்க, வைர நகைகளின் குவியல் பிரமிப்பூட்டும் வகையில் உள்ளன. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நடந்து வரும் இந்த கணக்கெடுப்பில் 6 அறைகளும் ஏ,பி,சி,டி,இ,எப். என கோடிடப்பட்டு ஒவ்வொரு அறையாக ஆய்வு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் வரை ரூ. 50 ஆயிரம் கோடிக்கு நகைகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஏ அறையில் மட்டும் 10 கிலோ எடையில் 18 அடி நீள தங்க மாலை இருந்தது. ஒரு பெட்டிக்குள் 1200 தங்க சங்கிலிகள் இருந்தன. 500 கிலோ எடை கொண்ட தங்க நாணயங்கள் ஒரு மூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்த ஒரு அறையில் மட்டும் கணக்கிடப்பட்ட நகைகளின் மதிப்பு ஒரு லட்சம் கோடியை தாண்டியதாம். திறக்கப்பட்ட பி அறையில் உள்ள பாதியளவு நகைகள் மட்டுமே மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் பல அறைகள் திறக்கப்படாமலேயே உள்ளது. 

தற்போது பத்மநாபசுவாமி கோவிலின் சுரங்க அறைகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ள தங்க நாணயங்களில் 17 கிலோ நாணயங்கள் கிழக்கு இந்திய கம்பெனிக்காரர்கள் காலத்தில் செய்யப்பட்டவை ஆகும். ஒரு சாக்கு மூட்டையில் இருந்த தங்க நாணயங்கள், நெப்போலியன் காலத்தை சேர்ந்தவை என்று தெரியவந்துள்ளது. இந்த தங்க, வைர நகைகளில் பெரும்பாலானவை பத்மநாபசுவாமிக்கு காணிக்கையாக கொடுக்கப்பட்டவை. ஒரு அறையில் இருந்த ஆபரணங்கள் அனைத்தும் திருவாங்கூர் மன்னர்கள், அரசிகள் அணிந்தவை என்று தெரியவந்துள்ளது. 

பல நூற்றாண்டுகளை கடந்தாலும் இன்னும் தங்க, வைர நகைகள் தற்போது செய்யப்பட்டவை போல் பளிச்சென்று மின்னுகின்றன. பத்மநாபசுவாமி கோவிலில் இன்னும் சில ரகசிய பாதாள அறைகள் திறக்கப்படாமல் உள்ளன. இந்த கணக்கெடுப்பு முடிய சுமார் ஒரு வாரமாகும் எனத் தெரிகிறது. அதன் பிறகு பத்மநாபசுவாமி கோயில் நகைகள் மதிப்பு பற்றிய விவரம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். இதற்கிடையே நகை மதிப்பீடு தகவல்கள் வெளியாவதால் பத்மநாபசுவாமி கோயிலுக்கு வெளியாவதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து விட்டது. 

எனவே இனி மதிப்பீடு செய்யப்படும் தகவல்களை வெளியிடக் கூடாது என்று பத்மநாபசுவாமி கோயில் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல ஆயிரம் கோடிக்கு தங்க, வைர நகைகள் உள்ளதால் பாதுகாப்பு கருதி கோவிலை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோயிலை பற்றி வியக்கத்தக்க தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளதால் தீவிரவாதிகளால் ஏற்படக் கூடும் ஆபத்தை தடுக்கவும் ராணுவ பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்கார கடவுள் என்ற அந்தஸ்தை எட்டியுள்ளது. உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி முந்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago