முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.ஆர்.பாலுவை மந்திரியாக்குங்கள் பிரணாப் முகர்ஜியிடம் கருணாநிதி கெஞ்சல்

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூலை.- 10 - சென்னையில் தன்னை சந்தித்த பிரணாப் முகர்ஜியிடம் டி.ஆர்.பாலுவை மந்திரியாக்கும்படி கருணாநிதி வேண்டுகோள் வைத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
சென்னையில் ஒரு விழாவில் பங்கேற்க வந்த நிதியமைச்சர் அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் மரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்தித்து பேசினார். கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. பிரணாப் முகர்ஜியுடன் மத்திய அமைச்சர் நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, டி.ஆர்.பாலு, பொன்முடி, துரைமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
காலை 10 மணி முதல் 11 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து பேசிய பிரணாப் முகர்ஜி கூறியதாவது:-
சென்னை வரும்போதெல்லாம் கருணாநிதியை சந்திப்பது வழக்கம். அப்போது அரசியல் விவகாரங்கள் பற்றி விவாதிப்போம். இன்றும் அதே போல் சந்தித்து ஆலோசனை நடத்தினேன். சமீப காலமாக ஊடகங்களில் தி.மு.க.- காங்கிரஸ் உறவு பற்றி செய்தி வருகிறது. தி.மு.க.- காங்கிரஸ் உறவில் எந்த பிரச்சினையுமில்லை. உறவு தொடர்கிறது. மேலும் வலு பெறும். இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.
தி.மு.க. அமைச்சர்கள் ஒவ்வொருவராக ஊழல் புகாரில் சிக்கி கைதாகி வருகின்றனர். ஏற்கனவே ஊழல் புகாரில் சிக்கிய ஆ.ராசா திகார் சிறையில் உள்ளார். ஏர்செல் நிறுவன அதிபரை மிரட்டிய வழக்கில் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தயாநிதி மாறன் விலக நேர்ந்தது. இதேபோல் உரத்துறையில் கேபினட் அந்தஸ்து பதவி வகிக்கும் அழகிரி தனது பணியை சரியாக செய்யாததால் ஏராளமான பைல்கள் தேங்கி பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிரதமர் மன்மோகன்சிங் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சில தி.மு.க. மத்திய அமைச்சர்களின் செயல்பாடும் கேள்விக்குறியாகி உள்ள சூழ்நிலையில் மந்திரிசபை விரைவில் மாற்றியமைக்க  உள்ளதால் இதில் தி.மு.க.வுக்கு இடமில்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் காங்கிரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவே பிரணாப் முகர்ஜி கருணாநிதியை சந்தித்ததாக கூறப்படுகிறது.    
மந்திரிசபை மாற்றத்தில் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோருக்கு மந்திரி பதவி வழங்கும்படி கருணாநிதி கேட்டு கொண்டுள்ளார். ஆனால் டி.ஆர்.பாலுவுக்கு எந்த காலத்திலும் மந்திரி பதவி இல்லை என்று காங்கிரசும், பிரதமரும் முடிவெடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
லல்லு பிரசாத் யாதவும்,  முலாயம் சிங் யாதவும் திடீரென காங்கிரசுக்கு ஆதரவு அளித்ததால் தி.மு.க. தயவை பற்றி சோனியா கவலைபடவில்லையாம்.    
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்