முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழியர் சேமநல வைப்பு நிதி மத்திய அறக்கட்டளை கூட்டம் வரும் 14-ம் தேதி நடக்கிறது

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.- 11 - ஊழியர்  சேமநல வைப்பு நிதி மத்திய அறக்கட்டளையின் கூட்டம் வருகின்ற 14-ம் தேதி டெல்லியில் நடக்கிறது. அப்போது நிதியை நிர்வகிக்க நிதி மேலாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஊழியர் சேமநல வைப்பு நிதி தற்போது ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடி அளவுக்கு இருக்கிறது. இந்த நிதியை ஊழியர் சேமநல நிதி மத்திய அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. தற்போது தொகை அதிக அளவில் பெருகிவிட்டதால் அதை நிர்வகிக்க நிதி மேலாளர்கள் தனியாக தேவைப்படுகிறது. அவர்களை நியமிப்பதற்காக ஊழியர் சேமநல வைப்பு நிதி மத்திய அறக்கட்டளையின் கூட்டம் வருகின்ற 14-ம் தேதி டெல்லியில் நடக்கிறது. நிதி மேலாளர்கள் நியமனம் தொடர்பாக சேமநல நிதி ஆலோசனை வாரியம் மற்றும் நிதி மற்றும் முதலீடு கமிட்டியின் சிபாரிசு அறிக்கைகள் இந்த கூட்டத்தில் வைக்கப்படும்.
கடந்த மாதம் சேமநல வைப்பு நிதி மத்திய அறக்கட்டளையின் கூட்டம் அதன் தலைவராக இருக்கும் மத்திய தொழிலாளர் அமைச்சர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அப்போது நிதி மேலாளர்கள் நியமிக்கும் தேதியை வரும் ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இதற்கிடையில் வரும் பாராளுமன்ற மழைக்கால தொடர் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி தொடங்குவதற்கு முன்பு நிதி மேலாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். நாட்டில் மொத்தம் 4 லட்சத்து 72 ஆயிரம் பேரிடம் சேமநல வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படுகிறது. இவர்களுக்கு பயன்படும் வகையில் நிதியை பயன்படுத்த நிதி மேலாளர்கள் மேலும் நியமிக்கப்பட உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!