பொதுமக்களின் குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் -அமைச்சர் புத்தி சந்திரன் பேச்சு

திங்கட்கிழமை, 11 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

ஊட்டி, ஜூலை.- 11 -பொதுமக்களின் குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என கேத்தி பகுதியில்  உணவுத்துறை அமைச்சர் புத்தி சந்திரன் பேசினார்.  ஊட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கேத்தி பேரூராட்சி பகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஊட்டி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக உணவுத்துறை அமைச்சருமான புத்தி சந்திரன் நேற்று ஊர்ஊராக சென்று நன்றி தெரிவித்தார். ஊட்டியிலிருந்து கிளம்பிய அவர் எல்லநள்ளி சென்றார். அங்கு அவருக்கு தாரை தப்பட்டை முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து உல்லாடா, கேத்தி பகுதிகளுக்கு சென்று அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்த பின் பேசியதாவது:​ தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி அமைவதற்காக ஊட்டி தொகுதியில் போட்டியிட்ட என்னை வெற்றி பெறச்செய்த உங்கள் எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சித்தலைவி அம்மா அமைச்சரவையில் உணவுத்துறை அமைச்சராக பொறுப்பு தந்துள்ளார்கள். தேர்தல் நேரத்தில் என்னிடம் கூறிய உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் தமிழக முதல்வர் அம்மாவின் ஆசியோடு உடனடியாக நிறைவேற்றத்தரப்படும் என்றார். அதனைத்தொடர்ந்து அச்சனக்கல் கிராமத்திற்கு சென்று அங்குள்ள பொதுமக்களிடம் நன்றி தெரிவித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் கெரடா, சாந்தூர், பாலாடா வழியாக கேத்தொரை கிராமத்திற்கு சென்று தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். சென்ற இடமெல்லாம் அமைச்சருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, குறைகள் குறித்த மனுக்களையும் பெற்றுக்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அமைச்சருடன் குன்னூர் ஒன்றிய கழக செயலாளர் கலைச்செல்வன், கேத்தி பேரூராட்சி செயலாளர் கண்ணபிரான், ஊட்டி தொகுதி செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், என்.பி.ராஜூ, மாணவரணி மாவட்ட செயலாளர் பால.நந்தகுமார், பாசறை மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத், குன்னூர் தொகுதி இணை செயலாளர் கே.கே.மாதன், எல்.மணி, பலராமன், உலிக்கல் சிவாஜி, பச்சநஞ்சன், பேரவை மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார், பேரவை ஒன்றிய செயலாளர் மாயன், மணியட்டி சிவக்குமார், மாணவரணி அவைத்தலைவர் சிவக்குமார், குன்னூர் சம்பத், நிர்மல்சந்த், சாந்தூர் போஜன், காந்திப்பேட்டை சந்திரன், கோபாலகிருஷ்ணன், ஜி.ராமச்சந்திரன், வினோத், சிராஜூஜீன் உட்பட  ஏராளமான அ.தி.மு.க.,வினர் உடன் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: