பழனி முருகன் மலைக்கோவிலில் அமைச்சர் சண்முகநாதன் ஆய்வு

திங்கட்கிழமை, 11 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

பழனி,ஜூலை.- 10 - பழனிமுருகன் மலைக்கோவிலில் இந்து சமஅறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன் சாமி தரிசனம் செய்த பின்பு அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்தார். பழனி முருகன் மலைக்கோவிலுக்கு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன் வருகை புரிந்தார். பின்பு அவர் பயபக்தியுடன் சாமிதரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்பு அமைச்சர் சண்முகநாதன் பழனிமலைக்கோவில் மின் இழுவை ரெயில் நிலையம்,ரோப்கார், அன்னதான மண்டபம், பஞ்சாமிர்தம் தாரிக்கும் நிலையம் திருஆவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன்கோவில், சரவணப்பொய்கை முடிஇறக்கும் இடம், கருணை இல்லம் உள்பட அனைத்து இடங்களிலும் அமைச்சர் சண்முகநாதன் ஆய்வு  செய்தார்.
 இதில் கே.எஸ்.என். வேணுகோபாலு எம்.எல்.ஏ., மாவட்ட துணைசெயலாளர் ஏ.டி.செல்லச்சாமி, முன்னாள் எம்.பி. குமாரசாமி, நகரசெயலாளர் கே.பரதன், சட்டமன்ற செயலாளர் மகுடீஸ்வரன் ஆயக்குடி பாரூக். பெரியசாமி, ஆ.சுந்தரம், ஷேக், முருகானந்தம், நகரஇணை செயலாளர் லட்சுமிமாணிக்கம், கோபாலகிருஷ்ணன் முன்னாள் ஒன்றியச்செயலாளர் டி.முத்துச்சாமி மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி ராஜா, துணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி ஆணையர் நடராஜன், பழனி மலைக்கோவில் பிரசாதஸ்டால் அதிபர் என். அரிகரமுத்து உள்பட ஏராளமானோர்களும் கோவில் ஊழியர்களும் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: