முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹவுரா - டெல்லி ரயில் போக்குவரத்து தொடங்கியது

புதன்கிழமை, 13 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

பதேபூர்,ஜூலை.13  - கல்கா ரயில் விபத்து ஏற்பட்ட ரயில் பாதையில் 44 மணி நேரம் கழித்து மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. ஹவுராவில் இருந்து டெல்லி வழியாக கல்கா நகருக்கு வந்த மெயில் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 70-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள் மற்றும் 250 பேர் படுகாயம் அடைந்தனர். ரயில் தடம் புரண்டதில் 15-க்கும் மேற்பட்ட பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதிய நொறுங்கிப்போகின. இதனால் மீட்புப்பணி மிகவும் தாமதமாகியது. மீட்புப்பணியில் மீட்புக்குழுவினர், ராணுவத்தினர்,போலீசார் தீவிரமாக ஈடுபட்டு பயணிகளை மீட்டனர். தடம்புரண்ட பெட்டிகளும் அப்புறப்படுத்தப்பட்டன. இதனையொட்டி கடந்த 44 மணி நேரத்திற்கு பின்னர் நேற்றுக்காலையில் சரியாக 8 மணிக்கு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. முதலில் அந்த வழியாக சரக்கு ரயில் விடப்பட்டது. அதனையடுத்து பயணிகள் ரயில்கள் விடப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் கான்பூர் மற்றும் பதேபூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கான்பூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களுடன் சுமார் ஒரு மணி நேரம் உரையாடிவிட்டு லக்கோனா சென்றார். அங்கு நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago