லஞ்சம் வாங்கிய புவியியல்-சுரங்கத்துறை இயக்குனர் கைது

வியாழக்கிழமை, 3 மார்ச் 2011      ஊழல்
try  vigilence1

 

கரூர். மார்ச்.- 3 - கரூர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் 2வது தளத்தில் செயல்பட்டு வருகிறது புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகம். இங்கு உதவி இயக்குனராக பணியாற்றி வருபவர் ரவிச்சந்திரன். கரூரை அடுத்த பரமத்தியில் வசித்து வருபவர் விவசாயி பிரபு. இவருக்கு சொந்தமான மாணாவாரி நிலத்தில் கல்குவாரி 5 ஆண்டுகளுக்கு அமைக்க, கடந்த 22​-11-​10 அன்று உதவி இடக்குனர் ரவிச்சந்திரனிடம் விண்ணப்பம் செய்திருந்தார். அதன்பேரில் ரவிசந்திரம் சுரங்கத்துறை தனி வருவாய் அலுவலர் பொய்யாமொழி ஆகியோர் விவசாயி பிரபு விண்ணப்பத்தில் குறிப்பிட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்த பிறகு 28-02​-11 அன்று அனுமதி தொடர்பாக அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறு கூறியதின் பேரில், பிரபு உதவி இயக்குனரை சந்தித்தபோது, குவாரி அமைக்க உரிமம் வேண்டுமென்றால் ரூ.1லட்சத்து என்பதாயிரம் லஞ்சமாக கொடுக்க  வலியுறுத்தினர். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியதால், ரூ.1.50 லட்சம் கொடுத்தால் போதும் என்று வலியுறுத்தினர். லஞ்சம் கொடுக் விரும்பாத விவசாயி பிரபு, இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனையின் பேரில், பேசியபடி லஞ்ச தொகையில் முதல் தவணையாக ரூ.1 லட்சம் கொடுக்க ஒப்புக்கொண்டதின்பேரில் சின்னதாராபுரத்தை சேர்ந்த புரோக்கர் முருகேசனிடம் பணத்தை கொடுக்க சொன்னார் உதவி இயக்குனர் ரவிச்சந்திரன். பணத்தை பெற்றுக்கொண்ட புரோக்கர் முருகேசன் எண்ணிப்பார்த்து. அதனை ரவிச்சந்திரனிடம் கொடுக்கும்போது அருகே மறைந்திருந்த  லஞ்ச ஒழிப்பு காவல் துறை கண்காணிப்பாளர் அம்பிகாபதியின் தலைமையிலான போலீசார் ரவிசந்திரன், சுரங்கத்துறை தனி வருவாய் அலுவலர் பொய்யாமொழி, புரோக்கர் முருகேசன் ஆகியோரை கையும் களவுமாக கைது செய்தனர். 

பின்னர் விசாரணை மேற்கொண்டபோது, பிடிபட்ட ரூ.1லட்சம் மட்டுமல்லாது, மேலும் ஒருவரிடம் ரூ.50 ஆயிரம் பெற்ஹ லஞ்சப்பணமும், மேலும் ரூ.4 ஆயிரமும் பிடிபட்டது. 

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீர் விசாரணை செய்து கரூர் குற்றவியல் nullநீதிமன்றத்தில் ஆ​ஜர் படுத்தினர். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உயர் அதிகாரி லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட விவகாரம் மற்ற அதிகாரிகளையும் கெதிகலங்க செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்: