முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகர்கோவிலில் தேரோட்டம் வரும் 13 ம் தேதி நடக்கிறது

சனிக்கிழமை, 30 ஜூலை 2011      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை,ஜூலை.- 30 - அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் ஆடித் திருவிழா தேரோட்டம் வரும் 13 ம் தேதி நடைபெறவுள்ளது.  இத்திருவிழாவிற்கான கொடியேற்றம் வரும் 5 ம் தேதி காலை 9 மணியளவில் சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து சுந்தரராஜ பெருமாள் அன்னவாகனத்திலும், மறுநாள் காலை பல்லக்கிலும் அன்றைய தினம் மாலை சிம்ம வாகனத்திலும், 7 ம் தேதி காலை அனுமார் வாகனத்திலும் எழுந்தருள்கிறார். 8 ம் தேதி காலை தேர் தளத்தில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெறுகிறது. 9 ம் தேதி காலை பெருமாள் மறவர் மண்டபத்துக்கு எழுந்தருள்கிறார். 10 ம் தேதி இரவு யானை வாகனத்திலும், 11 ம் தேதி இரவு புஷ்ப பல்லக்கிலும் பெருமாள் கோயிலில் வலம் வருகிறார்.  12 ம் தேதி இரவு குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 13 ம் தேதி காலை 5.30 மணியளவில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பூமி தேவி, ஸ்ரீதேவி சமேதரராக திருத்தேருக்கு எழுந்தருள்கிறார். காலை 8.30 மணியில் இருந்து 9 மணிக்குள் தேரோட்டம் தொடங்குகிறது. மதுரை, மேலூர், நத்தம் ஆகிய இடங்களில் இருந்து கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis