எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.10 - தமிழக அரசு இலவசமாக வழங்கும் கறவை மாடுகள், ஆடுகள் பெற தகுதியானவர்கள் யார் என்ற கேள்விக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து அதற்கு முற்றுபுள்ளி வைத்தார்.தமிழக அரசின் 2011-2012 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் மீதான விவதாம் இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, தமிழக அரசின் பட்ஜெட்டை அரசியல் பிரமுகர்கள், நடுநிலையாளர்கள் ,பத்திரிகையாளர்கள் பாராட்டும் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி வெளியில் வசைபாடுகிறார். அவர் மன்றத்தில் வந்து தனது கருத்தை பதிவுசெய்யலாம். பச்சைக்குழந்தைகள் பிஸ்கட்டுக்கு அழுவது போல் ஒரே இடத்தில் இடம் ஒதுக்கவேண்டும் என்று வராமல் உள்ளார்.
கடந்த சட்டசபையில் தற்போதைய பேரவை தலைவருக்கு கடைசியாய் ஓரத்தில் இடம் ஒதுக்கப்பட்டது. மின்சார அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கும் கடைசியில் இடம் ஒதுக்கப்பட்டது.இதனால் இவர்கள் பேரவை தலைவரை குனிந்துதான் பார்க்கவேண்டும் .ஆனால் கடந்த ஆட்சியில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக சஸ்பென்ட் செய்தபோது தன்னந்தனியாக வருகை புரிந்து தனியாக நின்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பேசினார். இன்று தி.மு.க.வினர் வெளியிலிருந்து அரசியல் செய்வது சரியான நிலைபாடல்ல.
வேளாண்மை துறை , மீன்வளம் போன்ற துறைகளில் முத்து முத்தாக பட்ஜெட் வந்துள்ளது. நுண்ணுயிர் பாசனம், நெல் உற்பத்திக்கு உதவும் வகையில் திட்டங்கள் அறிவித்துள்ளது வரவேற் கத்தக்கது.
நேற்று தமிழக முதல்வர் சட்டசபையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் எதுவும் இல்லை என்று கூறினார். எந்த அடிப்படையில் பயனாளிகளுக்கு ஆடு, மாடுகள் வழங்கப்படும் என அறிய விரும்புகின்றேன் என்று பேசினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய கால்நடைத்துறை அமைச்சர் சிவபதி உறுப்பினர் 6000 கறவை மாடுகள் 5 ஆண்டுகளில் வழங்கப்படும் என்று பேசினார். அது 6 ஆயிரம் அல்ல 60 ஆயிரம் என தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார். மேலும் கிராம சபைகள் மூலம் பரிந்துறைக்கப்படுவர்களுக்கு மாவட்ட கால்நடை இணை இயக்குநர், துணை இயக்குநர் பரிந்துறை அடிப்படையிலும் கிராமசபை கூட்டப்பட்டு நேர்மையான முறையில் முதல்வர் ஆணைப்படி கிராம சபை மூலமாக பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர் என்று கூறினார்.
இதற்கு பின் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குணசேகரன் கிராமசபை மூலமாக பயனாளிகள் தேர்வு செய்யப்படுவது நல்ல முறையாக இருக்காது. நிலையை மாற்றி வருமானத்தின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படவேண்டும் என்றார். மேலும் ஆடு மாடுகள் தமிழகத்திலிருந்த வாங்கித்தரப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அப்போது குறிப்பிட்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா கறவை மாடுகள் வெளிமாநிலத்திலிருந்து வாங்கப்படும். ஆடுகள் தமிழ்நாட்டிலிருந்த வாங்கப்படும் என்றார். மேலும் வெளிமாநிலங்களுக்கு கறவை மாடுகளை பயனாளிகளே அரச அதிகாரிகள் துணையுடன் நேரில் சென்று தேர்வு செய்யலாம். இதற்கான போக்குவரத்து செலவு தங்குமிடச் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றார். கறவை மாடுகள் பெற தகுதியானவர்கள் பற்றி முதல்வர் குறிப்பிடும்போது எந்த அடிப்படையில் இலவச கறவை மாடுகள் வழங்கப்படுகிறது என்றால் மகளிர் தலைமை கொண்ட குடும்பத்திற்கு முன்னுரிமை, கறவை மாடு பெறுபவர்கள் 60 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். ஒரு ஏக்கருக்கு அதிகமாக நிலம் வைத்திருக்கக் கூடாது. கறவை மாடுகள் வைத்திருக்க கூடாது. பயனாளிகளின் கணவன், மனைவி, மாமனார், மாமியார் நெருங்கிய உறவினர்கள் மத்திய, மாநில அரசு பணிகளிலோ, கூட்டுறவு சங்கங்களிலோ பணியில் இருக்க கூடாது. இலவச ஆடுகள் பெறும் திட்டத்தில் பயனாளிகளுக்கு கறவை மாடுகள் கிடையாது. பயனாளி அதே பகுதியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட, மற்றும் மலைவாழ் மக்கள் கட்டாயம் இடம்பெறவேண்டும். மேலும் இலவச ஆடுகள் பெறும் பயனாளிகள் அந்த கிராமத்திலேயே வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவராவது 18 வயது முதல் 60 வயதிற்குள் இருக்கவேண்டும். தற்போது ஆடு மாடுகள் வைத்திருக்க கூடாது. அரசு பணியில் கூட்டுறவு சங்கங்களில் பயனாளிகளின் தாய், தந்தை, மாமியார், மாமனார், மற்றும் நெருங்கிய உறவினர்கள் பணிபுரியக்கூடாது. கறவை மாடுகள் திட்டத்தில் பயனாளிகள் யாரும் இருக்ககூடாது. பயனாளிகளில் 30 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினராக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.
அப்போது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் சட்டமன்ற தலைவர் செளந்தர்ராஜன் கறவை மாடுகள் வைத்திருந்து அவை இறந்து போயிருந்தால் சம்பந்தப்பட்ட பயனாளிகள் கறவை மாடுகள் பெற தகுதியானவர்களா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா பயனாளிகள் கறவை மாடுகள் இலவசமாக பெறும்போது சொந்தமாக மாடுகள் வைத்திருக்ககூடாது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பண்ருட்டி சம்பவம் எதிரொலி: தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி
30 Jan 2026சென்னை, “தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான் என்று அ.தி.மு.க.
-
பா.ஜக. - அ.தி.மு.க. துரோக கூட்டணி: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது: சென்னையில் நடந்த கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
30 Jan 2026சென்னை, இந்தியாவிலேயே யாரும் அடைய முடியாத 11.19 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சியை, திராவிட மாடல் ஆட்சியில் சாத்தியப்படுத்தியிருக்கிறோம்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை பிப்ரவரி 5-ல் கூடுகிறது: இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை
30 Jan 2026சென்னை, பிப்ரவரி 2-வது வாரத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி 5-ம் தேதி (வியாழக்கிழமை) முதல்வர் மு.க.ஸ்டாலின
-
தி.மு.க. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்பு: காங்கிரசுடன் உறவு சுமுகமாகவே உள்ளது: கனிமொழி எம்.பி. பேட்டி
30 Jan 2026நெல்லை, தி.மு.க. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள தி.மு.க. எம்.பி.
-
சிவகங்கை மாவட்டத்தில் இன்று அரசு சார்பில் விழா: 2,560 கோடி ரூபாய் மதிப்பிலான 49 முடிவடைந்த திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
30 Jan 2026சென்னை, சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று ரூ.
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
30 Jan 2026சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
-
மகாத்மா காந்தியின் 79-வது நினைவு நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
30 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
-
திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டு பெண்கள் முடிவு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
30 Jan 2026சென்னை, திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.


