முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சின்னசேலத்தை புதிய தாலுகாவாக அறிவிக்க கோரிக்கை

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.10 - விழுப்புரம் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரம் என இரண்டு தாலுகாக்கள் உள்ளன.  இவை இரண்டும் மிகப் பெரிய தாலுகாவாகும்.  கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரம் ஆகிய வட்டங்கள் சேர்த்து சுமார் 330 வருவாய் கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகின்றன.  ஆகவே, பொதுமக்கள் நலன் கருதி, இவ்விரு தாலுகா அலுவலகங்களில் குவியும் மக்கள் நெரிசலைக் குறைக்கவும், ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டங்கள் பொதுமக்களுக்கு காலதாமதமின்றி சென்றடையவும், நிருவாக வசதிக்காகவும், மேற்சொன்ன 330 வருவாய் கிராம ஊராட்சிகளை முறையாகப் பிரித்து, சின்னசேலம் என்கிற பெயரில் புதிய தாலுகா ஒன்றை உருவாக்கித் தர ஆணையிட வேண்டுமென்று முதல்வர் ஜெயலலிதாவை பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

எனது சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம், சின்னசேலம் பகுதியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நகரைச் சுற்றி ஏறக்குறைய 65 கிராமங்கள் உள்ளன. சின்னசேலத்திற்கு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டுமென்று ஏறக்குறைய 25 ஆண்டுகளாக முயற்சி செய்யப்பட்டும் இன்னும் அங்கு தீயணைப்பு நிலையம் அமைக்கப்படவில்லை. தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் தரப்படும் என்ற இயேசுவின் சொல்லுக்கிணங்க,  கேட்காமலேயே பல திட்டங்களைத் தரும் ஜெயலலிதாவின் அரசு, சின்னசேலம் பகுதி மக்களின் கோரிக்கையை பரிவுடன் ஏற்று, தீயணைப்பு நிலையம் அமைக்க ஆணையிடுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

கள்ளக்குறிச்சி -​2 - கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகளின் துயர் துடைத்திட, கரும்பு விவசாயிகளின் நலன் காத்திட, போக்குவரத்து நெரிசலைக் குறைத்திட, 40 ஆண்டுகளாக விவசாயிகளிடையே உள்ள கோரிக்கை நிறைவேறிட, கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைத்து தர தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

மேலும், சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட கல்வராயன்மலைப் பகுதியை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டுமென்றும், அங்கு வசித்து வரும் மலைவாழ் பகுதி மக்கள் மின்கட்டணம் செலுத்த வேண்டுமென்றால், மலைப் பகுதியில் மின்கட்டண அலுவலகம் ஏதுமில்லை. அவர்கள் மலையைவிட்டு இறங்கி nullநீண்ட தூரம் செல்லவேண்டியிருப்பதால், கல்வராயன் மலைப் பகுதிக்கென்று தனியாக மின்கட்டண அலுவலகம் ஒன்றைத் தொடங்க ஜெயலலிதா ஆணையிட வேண்டுமென்று மிகவும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

சங்கராபுரம் தொகுதி, கல்வராயன் மலைப் பகுதியை உள்ளடக்கிய பகுதி ஆகும். மிகவும் பின்தங்கிய இந்தப் பகுதியில் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றை அமைத்துத் தருமாறு முதல்வர் ஜெயலலிதாவை பணிவுடன் வேண்டுகிறேன். இறுதியாக, சங்கராபுரம் ஒன்றியத்தில் உள்ள அரசம்பட்டு கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றைத் தொடங்கிட ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்