முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சாய் எண்ணெய் இறக்குமதி - முகர்ஜி

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.13 - ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு செலுத்த வேண்டிய தொகை முறையாக கட்டப்பட்டு வருகிறது என்று லோக்சபையில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். வளைகுடா நாடுகளில் ஒன்றான ஈரானில் இருந்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதற்கான தொகையை செலுத்துவதில் பல பிரச்சினைகள் இருந்தன. அதனால் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுவதை நிறுத்தப்போவதாக ஈரான் மிரட்டியதாக கூறப்படுகிறது.  

இதுகுறித்து நேற்று லோக்சபையில் பிரணாப் முகர்ஜி கூறுகையில் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சாஎண்ணெய்க்கு கொடுக்கப்படும் தொகை ஒழுங்காக கட்டப்பட்டு வருகிறது. தொகை கட்டுவதில் முதலில் சில பிரச்சினைகள் இருந்தன. அந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட்டு தற்போது தொகை ஒழுங்காகவும் சரியாகவும் கட்டப்பட்டு வருகிறது என்று அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று லோக்சபையில் தெரிவித்தார். ஈரானுக்கு செலுத்த வேண்டிய தொகையும் இருக்கிறது. அதற்காக கச்சாஎண்ணெய்யை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தப்போவதாக ஈரான் ஒருபோதும் மிரட்டவில்லை. பத்திரிகைகளில்தான் அந்தமாதிரி செய்திகள் வெளியாகின. ஆனால் அதிகாரப்பூர்வமாக ஈரான் எந்தவித மிரட்டலும் விடவில்லை என்றும் அவர் கூறினார். இந்தியா இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யில் 20 சதவீதம் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானில் இருந்து ஒவ்வொரு மாதமும் 12 மில்லியன் பேரல்கள் இந்தியா இறக்குமதி செய்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis