முக்கிய செய்திகள்

காங்கிரஸ் உயர்நிலை தலைவர்கள் ஆலோசனை

சனிக்கிழமை, 5 மார்ச் 2011      இந்தியா
congress

 

புது டெல்லி,மார்ச்.- 5 - பி.ஜே. தாமஸ் விவகாரம், 5 மாநில சட்டசபை தேர்தல் ஆகியவை குறித்து காங்கிரஸ் உயர்நிலை தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை நடத்தினர்.  ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியில் தாமஸ் நியமிக்கப்பட்டது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் அது காங்கிரஸ் கட்சிக்கும், அரசுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் உயர்நிலை தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. 

இதில் தாமஸ் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி உடன்பாடுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: