எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாமக்கல் ஆக.24- லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்காவிட்டால் இந்தியா முழுவதும் போராட்டம் விரிவுபடுத்தப்படும் என தமிழக தலைவர் நல்லதம்பி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதிலும் சீரான சுங்கவசூல்,3 நபர் இன்சூரன்ஸ் பிரிமியத்தை குறைக்க வேண்டும், டயர் இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18 ந் தேதி நள்ளிரவு முதல் தமிழகம்,புதுவை,கேரளா,கர்நாடகா,ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலம் உள்பட 6 மாநிலங்களைச் சேர்ந்த 26 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளன. அத்தியவசிய லாரிகளான டீசல்,பெட்ரோல், மருந்து, அத்தியாவசிய உணவு பொருட்கள், போன்ற வற்றை ஏற்றிச் செல்லும்லாரிகள் மட்டுமே இயங்குகின்றன.
லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய பருப்பு வகைகள், பழங்கள், கோதுமை,காய்கறிகள்,ஜவுளிகள் உள்ளிட்ட உணவு பொருட்களும், தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யக்கூடிய ஜவ்வரிசி, ஸ்டார்ச், முட்டை, மஞ்சள், ஜவுளிகள்,காய்கறிகள் என பல்வேறு பொருட்களும் ஏற்றுமதியாகாமல் முடங்கி கிடக்கின்றன. தமிழகத்தில் இருந்து கடந்த 6 நாட்களாக சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் சரக்குகள் தேங்கி கிடப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் மத்திய அரசோ இந்த பிரச்சனையில் லாரி உரிமையாளர்களை அழைத்து சுமூக பேச்சுவார்த்தை காண்பதில் சுனக்கம் காட்டி வருகிறது. இந்த போராட்டம் தொடர்ந்து நடந்தால் உணவு பொருட்கள், காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் ஏற்படும் மேலும் பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடும் எற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நல்லதம்பி நிருபர்களிடம் கூறியதாவது.கடந்த 5 நாட்களாக தென் மாநிலத்தில் லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த நிலையில் மத்திய அரசு திடீரென வரும் 1 ந் தேதி முதல் டோல்கேட் சுங்கவரியை உயர்த்தி இருப்பது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இதனால் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த எங்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தினோம்.பின்னர் மத்திய அரசுக்கு 7 நாட்கள் கெடு விதித்தோம் இந்த நிலையில் தலைவழி போக்குவரத்து அமைச்சகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதால் அதை ஏற்று பேச்சுவார்த்தைக்கு சென்றோம். அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா தலைமையில் நடந்த பேச்சுவாரத்தை தோல்வியில் முடிந்தது.
இன்று பிற்பகல்(நேற்று மதியம்) மத்திய தரைவழி போக்குவரத்துதுறை அமைச்சர் ஜோஷி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடக்கிறது. அதில் எங்கள் கோரிக்கைகள் ஏற்காவிட்டால் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |