முக்கிய செய்திகள்

அர்ஜூன் சிங் உடலுக்கு ஜனாதிபதி-பிரதமர் அஞ்சலி:இன்று உடல் தகனம்

ஞாயிற்றுக்கிழமை, 6 மார்ச் 2011      இந்தியா
Ajunsingh1

 

புதுடெல்லி,மார்ச்.- 6 - காங்கிரஸ் மூத்த தலைவர் அர்ஜூன்சிங் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர், சோனியா காந்தி உள்பட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அர்ஜுன்சிங் நேற்றுமுன்தினம் மரணமடைந்தார். 

அர்ஜூன் சிங்கின் உடல், டெல்லியில்  உள்ள அக்பர் சாலையில் இருக்கும் அவரது 17-ம் நம்பர் வீட்டில் நேற்று வைக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி பிரதீபா பாட்டில், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் அருண் ஜெட்லி, சரத்யாதவ், சீதாராம்யெச்சூரி, பிருந்தா காரத் மற்றும் தலைவர்கள் அர்ஜுன் சிங் வீட்டிற்கு சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

 அர்ஜூன் சிங்கின் உடல் நேற்று மாலையில் விமானம் மூலம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது. இன்று பிற்பகலில் உடல் தகனம் நடைபெறுகிறது. இறுதிச்சடங்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பிரணாப் முகர்ஜி, மோஷினா கித்வாய் மற்றும் பலர் கலந்துகொள்கிறார்கள். கடந்த 80-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் துணைத்தலைவராக அர்ஜூன்சிங் இருந்தார். அவர் மறைவுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி நேற்று கூடி இரங்கல் தெரிவித்தது

இதை ஷேர் செய்திடுங்கள்: