முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கங்கோத்ரி பக்தர்களுக்கு யாத்திரை பாதை திறப்பு

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2011      ஆன்மிகம்
Image Unavailable

டோராடூன். ஆக.- 29 - இமயமலையில் உள்ள கங்கோத்திரி கோவிலுக்கு யாத்திரை செல்லும் பாதை கடந்த 20 நாட்களாக மூடப்பட்டிருந்தது. இந்த பாதை நேற்று பக்தர்களுக்காக  திறக்கப்பட்டுள்ளது. இமயமலையில் கங்கோத்ரி, பத்ரிநாத்,கேதார்நாத் என்ற 3 புனித தலங்கள் உள்ளன. இந்த புனித தலங்களில் உள்ள தெய்வங்களை வழிபட ஆண்டு தோறும் ஏராளமான பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டும்  இந்த கோவில்களுக்கு செல்வதற்கான யாத்திரை துவங்கியது. ஆனால் இந்த கோவில்களுக்கு செல்லும் பாதை செல்லும் பகுதிகளில் தொடர்ந்து  கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 20 நாட்களாக கங்கோத்ரிக்கு  யாத்திரை செல்லும் பாதை மூடப்பட்டிருந்தது.
இப்போது மழை ஓரளவுக்கு தணிந்துள்ளதால்  இப்போது இந்த பாதை பக்தர்களின் யாத்திரைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலச்சரிவுகள் தற்போது அகற்றப்பட்டு  பாதை  சரி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக  இப்போது இநத வழியில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
இப்போது இந்த பகுதியில் மழை குறைந்துள்ளது. இதனால் வாகனப்போக்குவரத்து பாதிக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதை  சரி செய்யப்பட்டாலும் கூட இந்த பகுதியில் இடிபாடுகள் காணப்படுவதாலும்  சாலை சீர்கேடாக இருப்பதாலும்  இந்த பகுதி மக்கள் பெரிதும் கஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளனர். இந்த பகுதியில் மொத்தம் 130 இணைப்பு சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சாலை சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சாலை பாதுகாப்பு பணியாளர்களும் அரசு அதிகாரிகளும் இரவு பகலாக இநத பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!